Wednesday, 19 June 2013

பறக்கும் மோட்டார் சைக்கிள்: இங்கிலாந்து விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!

பறக்கும் மோட்டார் சைக்கிள்: இங்கிலாந்து விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!

Source: Tamil CNN
இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதுவிதமான பறக்கும் மோட்டார் சைக்கிளை தயாரித்துள்ளனர். இந்த மோட்டார் சைக்கிளில் விமானம் மற்றும் கப்பலில் இருப்பது போன்று 6 புரோபெல்லர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் 2 முன்புறமும், 2 பின்புறமும் மற்றும் ஓரங்களில் இருபுறமும் தலா ஒன்று என்ற வகையில் அவை உள்ளன. 95 கிலோ எடையுள்ள இந்த மோட்டார் சைக்கிள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்க கூடியது.இது சக்தி வாய்ந்த 2 பேட்டரிகளால் இயக்கப்படுகிறது. இந்த பறக்கும் மோட்டார் சைக்கிளின் செய்முறை பயிற்சி பராகுவேயில் நடைபெற்ற கண்காட்சியில் நடத்தப்பட்டது.
அப்போது, இந்த மோட்டார் சைக்கிள் சில மீட்டர்கள் உயரம் பறந்து சாதனை படைத்தது. இந்த நிகழ்ச்சியின்போது மோட்டார் சைக்கிளில் பொம்மை மனிதன் உட்கார வைக்கப்பட்டிருந்தான்.எதிர்காலத்தில் இந்த மோட்டார் சைக்கிளின் எந்திரத்தின் தரம் உயர்த்தப்பட உள்ளது. இதை விளையாட்டு, சுற்றுலா உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் உள்ள பேட்டரிகளை 2 மணி நேரத்துக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்ய வேண்டும். பறக்கும் மோட்டார் சைக்கிள் மூலம் 25 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்து செல்ல முடியும். இது மணிக்கு 32 கி.மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...