சிரிக்கத் தகுந்த சில விடயங்கள்
- உணவிலேயே அதிக நாள் கெடாத உணவு தேன். அதிலும், தேன் விரைவில் ஜீரணமாகும் தன்மை கொண்டது. தேனீக்கள் ஏற்கனவே ஒரு முறை தேனை ஜீரணம் செய்து விடுகின்றன என்பதே அதற்குக் காரணம்.
- டைட்டானிக் கப்பலை உருவாக்க வெறும் எழுபது இலட்சம் டாலர்கள் செலவிடப்பட்ட நிலையில், டைட்டானிக் திரைப்படத்தை எடுக்க இருபது கோடி டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாம்.
- தாய்வானில் உள்ள ஒரு நிறுவனம், கோதுமையைப் பயன்படுத்தி சாப்பிடும் தட்டுக்களை உற்பத்தி செய்கின்றன.
- பென்சிலால் எழுதியதை அழிக்கும் இரப்பரைக் கண்டுபிடிக்கும் முன்பு, ரொட்டி இரப்பராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- காலையில் எழுந்ததும் உற்சாகம் அளிக்க நாம் தேனீர் அருந்துவது உண்டு. அதைவிட உற்சாகம் அளிக்கும் சக்தி ஆப்பிள் பழத்துக்கு உள்ளதாம்.
- விண்வெளியில் இருப்பவர்களால் கண்ணீர் விட்டு அழ முடியாதாம். ஏன் என்றால், புவிஈர்ப்பு சக்தி இருந்தால்தான் கண்ணிலிருந்து கண்ணீர் வெளியே விழும்.
- மற்ற எந்த ரக நாய்களையும்விட, ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாய்கள்தான் மனிதர்களை அதிகம் கடிக்கின்றனவாம்.
ஆதாரம் : தினமணி
No comments:
Post a Comment