ஐ.நா.வில் இலங்கை மனித உரிமை நிலை குறித்த விவாதம்
நவ.02,2012. ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையில் இவ்வியாழனன்று இலங்கை குறித்த விவாதம் துவக்கப்பட்ட வேளையில், அமைச்சர் மஹிந்த சமரங்க, மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்கள் வகுத்தது, போரால் இடம்பெயர்ந்தோரை மீள் குடியேற்றம் செய்தது, வடக்கே மிதி வெடிகளை அப்புறப்படுத்தியது, படிப்பினைகள் ஆணைக்குழுவின் பரிந்துறைகளை அமல்படுத்த அரசு எடுத்துள்ள முயற்சிகள், பெண்கள் மற்றும் சிறார்களின் உரிமைகளை பாதுகாக்க எடுக்கப்படும் முயற்சிகள் போன்ற நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார் அமைச்சர் சமரங்க.
இலங்கைக்கு
உள்ளேயும் வெளியேயும் சில சக்திகள் நாட்டைச் சீர் குலைக்க முனைவதாக அவர்
குற்றம்சாட்டினார். கடத்தப்பட்டு காணமல் போவோரின் எண்ணிக்கை உயர்வதாக
கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.
இலங்கை
அமைச்சரின் உரைக்குப் பிறகு பிற நாட்டுப் பிரதிநிதிகள் பேசினர். வங்கதேசம்
உள்ளிட்ட சில நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவாகப் பேசினாலும், பல மேற்கத்திய நாடுகள் இலங்கை அரிசின் நிலைப்பாட்டை விமர்சித்தன.
இலங்கை
அரசின் மீது அதிகாரங்கள் குவிக்கப்படுவது குறித்தும் முன்பு போர் நடந்த
இடங்களில் நடக்கும் இராணுவ மயமாக்கல் குறித்தும் தன் கவலையை வெளியிட்ட
அமெரிக்கப் பிரதிநிதி, இலங்கை அரசு படிப்பினைக் குழுவின் ஆக்கபூர்வ பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment