Friday, 16 November 2012

வன்னிப் போரில் 146,679 தமிழர்களை காணவில்லை! – ஐக்கிய நாடுகள் சபை.

வன்னிப் போரில் 146,679 தமிழர்களை காணவில்லை! – ஐக்கிய நாடுகள் சபை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அமைத்த சார்ல்ஸ் பெட்ரி ஆணையத்த
ின் அறிக்கையில் வன்னிப் போரில் 146,679 தமிழர்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போயிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் போரின் போது ஐக்கிய நாடுகள் மன்றத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் நிமித்தம் செயலாளர் நாயகம் பான் கீ-மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட உள்ள ஆய்வுக் குழுவால் புதன்கிழமை அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது.

அவ்வறிக்கையின் இரண்டாவது பின்னிணைப்பில் (பக்கம் 38: சரத்து 5) வன்னிப் போரில் காணால்போன 146,679 தமிழர்களின் கதி குறித்து கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள், மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணையத்தின் முன் கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்ட செயலர்களால் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துமூலப் புள்ளிவிபரத்தில் 2008ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வன்னியில் 429,059 பொதுமக்கள் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்புள்ளி விபரத்தை வன்னியிலிருந்து ஏதிலிகளாக வவுனியாவை வந்தடைந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டோர் என 2009 யூலை மாதம் பதிவு செய்யப்பட்டோருடன் ஒப்பிடும் பொழுது 146,679 தமிழர்கள் காணாமல் போயிருப்பது வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


ஐ.நா அறிக்கையின் சரத்து:

5. Some commentators (see table) have argued that the discrepancy between the number of people recorded as being within the Wanni at the beginning of the final stages and the number recorded as having left the Wanni by the end of the war, indicates the number of people who are unaccounted for and who may have died during the period. On this basis, a written submission to the LLRC, cited population figures provided by the Government Agents of Killinochchi and Mullaithivu as listing a total population in the Wanni of 429,059 in early October 2008. The submission to the LLRC compared the population numbers in the Wanni in October 2008 with the number of people registered as IDPs outside the Wanni by July 2009 and said that some “146,679 people seem to be unaccounted for.” There is a similar discrepancy between the 360,000 people reported to be in the Mullaithivu area of the Wanni as the conflict intensified in early 2009, cited by the Government Agent of Mullaithivu in her own 2010 testimony to the LLRC, and the 289,915 cited by OCHA as having left the Wanni by June 2009.

ஐ.நா மன்றம் (பக்கம் 38: சரத்து 5).

நன்றி - www.sankathi24.com

No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...