Saturday, 25 January 2014

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வயிற்றில் தங்கம் கடத்திவந்த 3 பேர் கைது

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வயிற்றில் தங்கம் கடத்திவந்த 3 பேர் கைது

Source: Tamil CNN
 gold-smungling-200-news
மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வியாழக்கிழமை நள்ளிரவு திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது 3 பேர் மீது சந்தேகம் எழுந்ததால், அவர்களை தனியாக அழைத்து சோதித்தனர். அப்போது, அவர்களது வயிற்றில் தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இருவரிடம் தலா அரைக்கிலோ தங்கக் கட்டிகளும், ஒருவரிடம் ஒரு கிலோ தங்கக் கட்டிகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் நீமிசலைச் சேர்ந்த ரிஸ்வான் கான், முகமது இப்ராகிம், இலியாஸ் ஆகிய மூவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களது வயிற்றில் இருந்து 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...