Friday, 24 January 2014

2,300 ஆண்டுகள் பழைமையான சித்திரவதை கூடங்கள் கண்டுபிடிப்பு

2,300 ஆண்டுகள் பழைமையான சித்திரவதை கூடங்கள் கண்டுபிடிப்பு

Source: Tamil CNN
2,300 ஆண்டுகள் பழைமையான சித்திரவதை கூடங்களைக் கொண்ட நிலவறையொன்று துருக்கியின் புர்ஸா நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நிலவறையில் சித்திரவதைகூடங்களுடன் இரத்தம் உறைந்திருந்த கிணறொன்றும் படுகொலைக் குழியொன்றும் காணப்படுகின்றன. இந்த நிலவறை சித்திரவதை கூடங்கள் உலுடாங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இப்ராஹிம் யில்மாஷ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலவறையானது கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படும் கட்டடங்களுடன் தொடர்பைக் கொண்டிருந்தன.
அச்சமயம் ஊமைகளாகவும் செவிடர்களாகவும் இருந்தவர்களே மரணதண்டனைகளை நிறைவேற்றுவதற்கு நியமிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட கைதிகளின் தலைகளை வெட்டி கிணற்றில் வீசிய பின் எஞ்சிய உடல் பகுதிகளை அந்தக் கைதிகளது உறவினர்களிடம் கையளித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலவறை சித்திரவதை கூடங்களை அருங்காட்சியகமாக மாற்றி 2016 ஆம் ஆண்டிற்குள் திறந்து வைக்க அகழ்வாராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
2500yrs-cave-found-puthinam-338-002
2500yrs-cave-found-puthinam-441-001

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...