Monday, 17 June 2013

இலந்தை

இலந்தை

இலந்தைப் பழத்தில் மருத்துவக் குணங்கள் அதிகம் அடங்கியுள்ளன. கிராமங்களில் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இப்பழம் ஏழைகளின் பழம் என்றும் அழைக்கப்படுகிறது. இலந்தையில் நாட்டு இலந்தை, காட்டு இலந்தை என இரண்டு வகைகள் உள்ளன. இந்தப் பழத்தில் சிலவற்றில் இனிப்புச் சுவையும், சிலவற்றில் புளிப்புச் சுவையும் இருக்கும். இலந்தையில் வைட்டமின் ஏ, பி, சி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் அதிகம் உள்ளன. இலந்தை கிடைக்கும் காலங்களில் இதை எடுத்துக் கொள்ளலாம். எலும்புகள் உறுதி பெறுவதோடு, பற்களும் உறுதி பெறும். வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்களுக்கு மருந்தாக இலந்தை பயன்படுகிறது. மாரடைப்பு உள்ளவர்கள் இப்பழத்தைச் சாப்பிடலாம். சிலர் எதைச் சாப்பிட்டாலும் செரிக்காமல் அவதிப்படுவர். இவர்கள் இலந்தையுடன் உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் வயிறு இலகுவாகி செரிமானப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். பெண்களுக்கு மாதவிடாக் காலங்களில் வரும் வயிற்றுப் போக்கைத் தடுக்கவும் இப்பழம் பயன்படுகிறது. மாணவர்களுக்கு நினைவாற்றலை அதிகரிக்கக்கூடிய சக்தியும் இலந்தைக்கு உண்டு.

ஆதாரம் தினமணி

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...