ஈழத் தமிழர்களுக்காக கறுப்பு பெட்ஜ் அணிந்து மாணவர்கள் கல்லூரி செல்ல திட்டம்!
ஈழத்தமிழர்களுக்காக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் நாளை திறக்கப்படுகின்றன. தேர்வு நெருங்குவதால் படிப்பை கருத்தில் கொண்டு மாணவர்கள் நாளை கல்லூரிகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
அதே நேரத்தில் ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிய திட்டமிட்டுள்ளனர். வகுப்புகள் தொடங்கும் நேரத்தில் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தவும் மாணவர்கள் முடிவு செய்துள்ளனர். இனிவரும் காலங்களில் தங்களின் கல்வி பாதிக்கப்படாத வண்ணம் போராட்டத்தை தொடரவும், தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள நந்தனம் கலைக்கல்லூரி மாணவர் இளையராஜா கூறியதாவது:-
இலங்கை தமிழர்களின் நலனுக்காக தொடர்ந்து போராட முடிவு செய்துள்ளோம். இனி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதே எங்கள் நோக்கமாகும். எனவே இனிவரும் காலங்களில் கல்லூரி நேரம் தவிர்த்து மாலை நேரங்களில் எங்களது போராட்டத்தை வலிமையுடன் தொடர்ந்து நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment