நெல்லிக்கனி
உயிர்ச்சத்தான வைட்டமின் ‘சி’ சத்து நெல்லிக்கனியில் நிறைந்துள்ளதால் இந்திய மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.
சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள்
காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது. சர்க்கரை நோயாளியின்
கணையத்தை வலுவேற்ற உதவும். வயதுமுதிர்ச்சி காரணமாக வரும் தொல்லைகளைப்
போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது.
வாழ்நாளை நீடிக்கச் செய்யும் காயகல்ப மூலிகையாகும். நடுத்தர ஆரஞ்சுப் பழம் ஒன்றில் இருப்பதைப் போல இருபது மடங்கு வைட்டமின் ‘சி’ சத்து இதில் அடங்கியிருக்கிறது. காய்கள் காய்ந்தாலும், கொதிக்க வைத்தாலும் இச்சத்து அழிவதில்லை. நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, கரிச்சத்து, சுண்ணாம்புச் சத்து, தாதுப்பொருள், இரும்பு, நிக்கோடினிக்
அமிலம் முதலியவை அடங்கியுள்ளன. இரத்தத்தில் சேரும் யூரிக் அமிலத்தை
நெல்லிக்காய் விலக்குகிறது. இது இதயத்திற்கு வலிமையை வழங்குகிறது.
குடற்புண், இரத்தப்பெருக்கு, நீரிழிவு, கண்
நோய் ஆகியவற்றைக் குணமாக்கும். உடல் அசதி மற்றும் அஜீரணக் கோளாறுகளுக்கு
இது கைகண்ட மருந்தாகும். அத்துடன் வாயுத் தொல்லைகளைப் போக்கக்கூடிய குணம்
இதற்கு உண்டு. உணவு செரிமானமின்மைக்கு எப்படி பெருங்காயம் உதவுகின்றதோ
அதைப்போன்று, நெல்லிக்காய் பசியைத் தூண்டவும், சுறுசுறுப்பையும் தெம்பையும் தந்து நமது உடல் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது.

No comments:
Post a Comment