Wednesday, 16 October 2024

இரஷ்யா-உக்ரைன் இடையே அமைதிக்கான புதிய முயற்சி

 

இரஷ்யா-உக்ரைன் இடையே அமைதிக்கான புதிய முயற்சி


உக்ரைனில் அமைதிக்கான பாதையைக் காணவும், உக்ரேனிய குழந்தைகளை தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைக்கவும், போர்க்கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளவும் திருஅவையின் முயற்சி

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

உக்ரைனில் அமைதிக்கான  பாதையைக் காணவும், உக்ரேனிய குழந்தைகளை தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைக்கவும், போர்க்கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளவும்  இத்தாலிய கர்தினால் Matteo Zuppi அவர்கள், திருத்தந்தையின் சார்பில் அப்பகுதிக்கான தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

இரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே அமைதியை ஏற்படுத்துவதற்கான கூடுதல் முயற்சிகளையும் மேற்கொள்வார் என்று திருப்பீட செய்தித் துறை இயக்குநர் மத்தேயோ புரூனி அவர்கள் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு ஜூன் 5, 6 ஆகிய தேதிகளில் உக்ரைன் நாட்டிற்குச் சென்று தனது அமைதி பயணத்தைத் தொடங்கிய கர்தினால் அவர்கள், உக்ரேனிய குடியரசுத் தலைவர் Volodymyr Zelensky  அவர்களையும் மற்றும் பல அரசு அதிகாரிகளையும் சந்தித்தார்.

பின்னர், அதே ஆண்டில் ஜூன் 28, 29, 30  ஆகிய தேதிகளில் இரஷ்ய நாட்டிற்குச் சென்று ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் முதுபெரும் தந்தை Kirill  அவர்களுடன் இணைந்து, இரஷ்ய அரசுத் தலைவரின் உதவியாளரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான Yuri Ushakov  அவர்களையும், குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் Maria Lvova-Belova    உள்ளிட்ட  அரசு அதிகாரிகளையும் சந்தித்தார்.

மேலும்,   ஜூலை 17,18,19  ஆகிய தேதிகளில்  2023 ஆம் ஆண்டு வாஷிங்டன் சென்று, அமெரிக்க குடியரசுத் தலைவர் Joe Biden  அவர்களை சந்தித்து,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கடிதத்தை வழங்கினார்.

2023 செப்டம்பர் 13,14,15 தேதிகளில் பெய்ஜிங் சென்ற  கர்தினால் சுப்பி அவர்கள்  ஐரோப்பா மற்றும் ஆசியா விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்பு பிரதிநிதி Li Hui அவர்களைச் சந்தித்தார்.

Bologna உயர்மறைமாவட்டத்தின் பேராயரும், இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் Matteo Maria Zuppi அவர்களை, 2023ஆம் ஆண்டு  ஜூன் மாதத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன் அமைதிக்கான தனது சிறப்புத் தூதராக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...