கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்ற வேண்டிய திருஅவை
கலாச்சாரங்களுக்கும் திருஅவைக்கும் இடையேயான தொடர்பு என்பது ஒருவருக்கொருவர் கொடைகளைப் பரிமாறிக்கொள்ளும் சிறந்த வழிமுறை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
தான் வாழும் இடத்திலும் கலாச்சாரத்திலும் ஆழமாக வேரூன்றாத திருஅவை பிறரால் புரிந்துகொள்ளப்படுவது சிரமம் என அக்டோபர் 15, செவ்வாய்க்கிழமையன்று உலக ஆயர் மாமன்றக் கூட்டத்தில் உரையாற்றினார் கர்தினால் Jean-Claude Hollerich.
ஆயர் மாமன்றத்தின் பொது அறிக்கையாளர் கர்தினால் Hollerich அவர்கள், திருஅவையும் கலாச்சாரமும் குறித்து ஆயர் மாமன்ற வழிமுறை ஏட்டின் நான்காவது பகுதியை அறிமுகப்படுத்தி உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
இடங்கள், கலாச்சாரங்களுக்கும் தலத்திருஅவைகளுக்கும் இடையேயான தொடர்பு குறித்து எடுத்துரைத்த கர்தினால், கலாச்சாரங்களுக்கும் திருஅவைக்கும் இடையேயான தொடர்பு என்பது ஒருவருக்கொருவர் கொடைகளைப் பரிமாறிக்கொள்ளும் சிறந்த வழிமுறை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
தலத்திருஅவைகளுக்கும் அகில உலக திருஅவைக்கும் இடையேயான உறவுகள் குறித்தும், தலத்திருஅவைகளுக்கு இடையே நிலவ வேண்டிய உறவு மற்றும் ஒத்துழைப்பின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார் கர்தினால் Hollerich.
இன்றைய திருஅவையை மேலும் செயல்பாடுடையதாக மாற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துவரும் முயற்சிகளை எடுத்துரைத்த கர்தினால், ஆயர் மாமன்றத்தில் பங்கேற்கும் பிரதிநிதிகள், தாங்கள் வாழும் இடத்திலுள்ள இறைமக்களின் தேவைகள் மற்றும் வாழ்விலிருந்து அனைத்தும் துவக்கப்பட வேண்டும் என்பதை திருத்தந்தையின் செயல்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றன என மேலும் கூறினார்.
No comments:
Post a Comment