Friday, 11 October 2024

இளம் புனிதராக அறிவிக்கப்பட உள்ள அருளாளர் கார்லோ அகுதீஸ்

 

இளம் புனிதராக அறிவிக்கப்பட உள்ள அருளாளர் கார்லோ அகுதீஸ்


இருபதாம் நூற்றாண்டின் இளம் புனிதராக அறிவிக்கப்பட உள்ள அருளாளர் கார்லோ அகுதீஸ் அவர்களின் மறைவு நாளானது அக்டோபர் 12 சனிக்கிழமை திருஅவையில் நினைவுகூரப்படுகின்றது.
மெரினா ராஜ் - வத்திக்கான்  

இருபதாம் நூற்றாண்டின் இளம் புனிதராக அறிவிக்கப்பட உள்ள அருளாளர் கார்லோ அகுதீஸ் அவர்களின் மறைவு நாளானது அக்டோபர் 12 சனிக்கிழமை நினைவுகூரப்பட உள்ளது. இலண்டனில் 1991 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் நாள் பிறந்த கார்லோ அகுதீஸ் அவர்கள் தனது குடும்பத்தாருடன் இத்தாலியின் மிலான் நகருக்குக் புலம்பெயர்ந்தார். வடக்கு இத்தாலியின் மிலான் நகரில் தனது பள்ளிப்பருவத்தையும் இளமைப் பருவத்தையும் அனுபவித்த கார்லோ, திருநற்கருணை மீது ஆழமான பற்று கொண்டவர். தனது இந்த ஆர்வத்தை பக்தியை எல்லாரும் அறிந்துகொள்ளும் பொருட்டு புதிய வலைப்பதிவை ஆரம்பித்து அதில் உலகில் நடந்த எல்லா திருநற்கருணை வழியாக நடைபெற்ற அற்புதங்களைப் பதிவிட்டார். பங்குப்பணிகளிலும் ஆலயப்பணிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வந்த கார்லோ 2001ஆம் ஆண்டு எலும்பு மஞ்சை இரத்தப்புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார். புனிதர் பட்ட படிநிலைகளுக்கான ஆய்வு 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 மிலான் மறைமாவட்ட அளவில் தொடங்கப்பட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் 2018ஆம் ஆண்டு ஜுலை 5ஆம் நாள் இறை ஊழியராகவும், 2020ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று அசிசி நகரில் அருளாளராகவும் உயர்த்தப்பட்டார்.

2024 ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று அருளாளர் கார்லோ அகுதீஸ் புனிதராக விரைவில் உயர்த்தப்பட இருக்கின்றார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள நிலையில் யூபிலி ஆண்டில் அருளாளர் கார்லோ அகுதீஸ் இரண்டாம் நூற்றாண்டின் இளம்புனிதராக உயர்த்தப்பட உள்ளார்.

தனது 15 வயதிலேயே திருநற்கருணை மீது ஆழமான பற்று கொண்டு  பிறரும் அவ்வாறு வாழ தன் வாழ்வால் எடுத்துரைத்த அருளாளர் கார்லோ அகுதீஸ் அவர்கள் பற்றிய கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்தந்தை ஞானப்பிரகாசம். கோயம்புத்தூர் மறைமாவட்ட அருள்பணியாளரான தந்தை ஞானப்பிரகாசம் அவர்கள்,. பெங்களூருவில் உள்ள புனித பேதுரு திருப்பீடக் குருத்துவக் கல்லூரியில் தத்துவம் மற்றும் இறையியல் பயின்றவர். 2018ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்ற தந்தை அவர்கள், கடந்த 4 ஆண்டுகளாக கோவை மறைமாவட்ட இளைஞரணி இயக்குநராகப் பணியாற்றி வருகின்றார். தற்போது கோவை மறைமாவட்டம் தூய மிக்கேல் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில மொழி முதுகலை ஆசிரியராக பணிபுரியும் தந்தை அவர்கள், இளைஞர்களை, சமூக, ஆன்மிக, மன, அறிவுசார், உளவியல் பரிமாணங்களை உள்ளடக்கிய முழுமையான புனிதத்தின் பாதையில் வழிநடத்துதலை தனது முதன்மையானப் பணியாக ஆற்றிவருகின்றார். நற்செய்தி அறிவிப்பில் ஆர்வம், மறைநூல்கள் மேல் அளவற்ற அன்பு, இளையோர் பணியில் மிகுந்த ஈடுபாடு, பண்ணிசைத்தும் பாட்டிசைத்தும் கடவுளைப் போற்றும் திறன் கொண்ட தந்தை அவர்களை அருளாளர் கார்லோ அகுதீஸ் பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.


No comments:

Post a Comment