அணுசக்தி எதிர்ப்பு அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு
ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு அங்கு என்ன நடந்தது என்பதை விளம்பரப்படுத்தவும், அணு ஆயுதங்களை ஒழிக்க வலியுறுத்தவும் ஜப்பானிலும் உலகெங்கிலும் பல ஹிபாகுஷா அமைப்புகள் அல்லது அமைதிவாத நடவடிக்கைகள் உள்ளன.
மெரினா ராஜ் – வத்திக்கான்
அமைதிக்கான நோபல் பரிசானது நிஹான் ஹிடாங்கியோ என்ற அணுசக்தி எதிர்ப்பு அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது குறித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் நாகசாகி உயர்மறைமாவட்ட பேராயர் ஜோசப் மிட்சுவாகி டகாமி.
அமைதிக்கான நோபல் பரிசு பற்றி வத்திக்கான் வானொலிக்கு வழங்கிய நேர்காணலின்போது இவ்வாறு வாழ்த்து தெரிவித்த பேராயர் ஜோசப் மிட்சுவாகி அவர்கள், அணு ஆயுந்தங்கள் இல்லாத உலகத்தை விரும்பும் மக்கள் அனைவருடனும், அதற்காக கவனம் செலுத்துவதில் முக்கியத்துவம் செலுத்துவதை அங்கீகரித்த நோபல் பரிசுக்குழுவினருக்கு தன் நன்றியினைத் தெரிவிப்பதாகவும் எடுத்துரைத்தார்.
மிகப்பெரிய ஹிபாகுஷா அமைப்பான நிஹான் ஹிடான்கியோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது, அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, அணுசக்தி தடுப்பு மற்றும் அமைதியின் அவசியத்தைக் கூறும் குடிமக்களின் மனநிலையை மாற்ற வலுவான உத்வேகத்தை அளிக்கும் என்று தான் நம்புவதாகவும் எடுத்துரைத்தார்.
ஜப்பான் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரான ஆயர் ஜோசப் மிட்சுவாகி அவர்கள், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நாடுகளில் ஏற்பட்ட அணுகுண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு அங்கு என்ன நடந்தது என்பதை விளம்பரப்படுத்தவும், அணு ஆயுதங்களை ஒழிக்க வலியுறுத்தவும் ஜப்பானிலும் உலகெங்கிலும் பல ஹிபாகுஷா அமைப்புகள் மற்றும் அமைதிவாத நடவடிக்கைகள் உள்ளன என்றும் எடுத்துரைத்தார்.
நியூ மெக்சிகோவின் தூய ஃபே உயர்மறைமாவட்ட பேராயர், ஜான் வெஸ்டரின் முயற்சியால், தூய ஃபே, சாட்டில், நாகசாகி, ஹிரோசிமா ஆகிய மறைமாவட்டங்கள் இணைந்து அணு ஆயுதம் இல்லாத சங்கத்தை உருவாக்கின என்றும், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று நாகசாகிய தலத்திருஅவையில் இந்த இயக்கமானது தலத்திரு அவை மற்றும் சிவில் ஆகிய இரண்டிலும் திறக்கப்பட்டது என்றும் கூறினார் பேராயர் மிட்சுவாகி.
No comments:
Post a Comment