Friday 11 October 2024

அக்டோபர் 11 அன்று உக்ரைன் அரசுத்தலைவர் - திருத்தந்தை சந்திப்பு

 

அக்டோபர் 11 அன்று உக்ரைன் அரசுத்தலைவர் - திருத்தந்தை சந்திப்பு


2023 ஆம் ஆண்டு மே 13 அன்று வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் உள்ள ஓர் அறையில் அரசுத்தலைவர் விளாடிமீருடன் ஏறக்குறைய 40 நிமிடங்கள் உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

உக்ரைன் அரசுத்தலைவர் விளாடிமீர் ஜெலன்ஸ்கி அக்டோபர் 11 வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்திக்க உள்ளார்.

2023 ஆம் ஆண்டு மே 13 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்த ஜெலன்ஸ்கி அவர்கள், 2024 அக்டோபர் 11 வெள்ளிக்கிழமை மூன்றாம் முறையாகத் திருத்தந்தையை சந்திக்க உள்ளார்.

உக்ரைன் - இரஷ்யா போர் ஆரம்பித்து ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகளாக துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் உக்ரைன் மக்களுக்காக செபிக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டு வரும் நிலையில் அரசுத்தலைவர் ஜெலன்ஸ்கி திருத்தந்தை அவர்களை சந்திக்க இருக்கின்றார்.

குரோவேஸியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உக்ரைன் மற்றும் தென்கிழக்கு ஐரோப்பா நாடுகளுக்கு இடையிலான உச்சிமாநாட்டில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் உக்ரைன் அரசுத்தலைவர் விளாடிமீர் ஜெலன்ஸ்கி திருத்தந்தையை சந்திக்க அக்டோபர் 11 வெள்ளிக்கிழமை வத்திக்கான் வர உள்ளார்.

2023 ஆம் ஆண்டு மே 13 அன்று வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் உள்ள ஓர் அறையில் அரசுத்தலைவர் விளாடிமீருடன் ஏறக்குறைய 40 நிமிடங்கள் உரையாடிய திருத்தந்தை அவர்கள், பொது முறையீடுகள், அமைதிக்கான தொடர்ச்சியான விண்ணப்பங்கள், உக்ரைன் நாட்டிற்காக தனது நிலையான செபம் போன்றவற்றை உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிணையக் கைதிகளாக பிடிக்கப்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விடுவிக்கப்படல், போர்த்தாக்குதல்கள், வன்முறைகள் போன்ற அனைத்தும் பற்றி திருத்தந்தையுடனான சந்திப்பின்போது பகிர்ந்துகொள்ளப்பட்டது.  

2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 அன்று கோவிட்-19 பெருந்தொற்றுநோயின் அச்சுறுத்தல் ஐரோப்பாவில் பரவத் தொடங்கியபோது, ​​கிழக்கு உக்ரைனில் மட்டும் போரானது ஓர் அலகை போல உருவாக ஆரம்பித்து இருந்தது. அப்போது முதன்முறையாக அரசுத்தலைவர் விளாடிமீர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்தார்.

அன்று முதல் இன்று வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்புறும் உக்ரைன் மக்கள் அமைதியை அடையவேண்டும் பிணையக்கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் என்ற நோக்கத்திற்காக தனது செபங்களையும், பல்வேறு கடிதங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Pope: Respect UN peacekeepers in Lebanon

  Pope: Respect UN peacekeepers in Lebanon After the Israeli army fires at UN peacekeeping forces in southern Lebanon, the Pope calls for th...