Tuesday 15 October 2024

மறைப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட அக்டோபர் மாதம்

 

மறைப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட அக்டோபர் மாதம்


நமது ஒருங்கிணைந்த பயணத்தின் நோக்கமான, “ஒன்றிப்பு, பங்கேற்பு, மறைப்பணி” என்பவை, இன்றைய உலகில் நற்செய்தி அறிவிப்பதை தங்களது முதல் பணியாகக் கொண்டுள்ளதை நினைவுபடுத்துகின்றன

மெரினா ராஜ் - வத்திக்கான்

மறைப்பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த அக்டோபர் மாதத்தில் கிறிஸ்துவை நமது வாழ்வின் மூலைக்கல்லாக மாற்றுவதற்கு தூய ஆவியின் ஆற்றலை வேண்டுவோம் என்று குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 14 திங்கள்கிழமை தனது X  வலைதளப்பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் # மறைப்பணி மாதம் அக்டோபர் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

மறைப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த அக்டோபர் மாதத்தில் கிறிஸ்துவை நமது வாழ்வின் மூலைக்கல்லாக மாற்றுவதற்கும், அவர் நமக்கு தரும் ஒற்றுமை மற்றும் அமைதிக்கு, மகிழ்வின் சான்றுகளாக நாம் திகழ்வதற்கும் தூய ஆவியின் அருளினை வேண்டுவோம் என்பதே திருத்தந்தையின் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.

அக்டோபர் மாதம் 20 ஞாயிற்றுக்கிழமை சிறப்பிக்கப்பட இருக்கின்ற உலக மறைப்பணி தினத்திற்கான செய்தியை, “எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்” என்ற விவிலிய வார்த்தைகளுடன் வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  ‘போய் அழைத்துவாருங்கள்’,‘எல்லாரையும்’,‘திருமணவிருந்துக்கு’, என்ற மூன்று வார்த்தைகளுக்கும் தனித்தனியாக தனது மறைப்பணி ஞாயிறுக்கான செய்தியில் விளக்கமளித்துள்ளார்.

நம் ஒன்றிணைந்த பயணத்தின் நோக்கமான, “ஒன்றிப்பு, பங்கேற்பு, மறைப்பணி” என்பவை இன்றைய உலகில் நற்செய்தி அறிவிப்பதை தன் முதல் பணியாகக் கொண்டுள்ளதை நினைவுபடுத்தி நிற்கின்றன என்றும் தனது செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

No comments:

Post a Comment

Pope: Respect UN peacekeepers in Lebanon

  Pope: Respect UN peacekeepers in Lebanon After the Israeli army fires at UN peacekeeping forces in southern Lebanon, the Pope calls for th...