Monday 7 October 2024

திருஅவையில் பெண்களின் பங்கு, பொது மக்களின் நிலை குறித்த அமர்வு

 

திருஅவையில் பெண்களின் பங்கு, பொது மக்களின் நிலை குறித்த அமர்வு



திருஅவை இயேசுவின் உடல் நாம் அனைவரும் அதில் உறுப்பினர்களாக இருக்கின்றோம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

அக்டோபர் 4 வெள்ளிக்கிழமை நடைபெற்ற 16ஆவது உலக ஆயர் மாமன்ற அமர்வில் 351 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்றும், திருஅவையில் பெண்களின் பங்கு, பொது மக்களின் நிலை, செயலாக்கமுள்ள செவிமடுத்தல் போன்ற பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

அக்டோபர் 4 வெள்ளிக்கிழமை தூய பிரான்சிஸ் அசிசியார் திருவிழாவன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு பெயர் கொண்ட திருவிழா வாழ்த்து கூறி ஆயர் மாமன்றத்தின் மூன்றாம் நாளானது ஆரம்பமானது.  மறைப்பணி, திருவழிபாடு, உரையாடல், கலாச்சாரம், மற்றும் சமயம் பற்றிய பல்வேறு தலைப்பிலான கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

திருஅவையை ஐரோப்பியமயமாக்கப்பட்டது, ஒருங்கிணைந்த பயணம் என்பது உதவி என்ற தலைப்பில் கர்தினால் லோபெஸ் அவர்களும், வன்முறை மற்றும் அவதூறுகளுக்கு உள்ளாகும் பெண்கள் பற்றிய சிக்கல்கள் மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை என்றும் ஆயர் ரண்டாஸோ செய்தியாளர் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

திருஅவை இயேசுவின் உடல் நாம் அனைவரும் அதில் உறுப்பினர்களாக இருக்கின்றோம் என்று அதிகமாக வலியுறுத்தப்பட்டதாகவும், எல்லா சிறப்பு அம்சங்களும் வேறுபாடுகளும் மிக முக்கியம் ஆனால் அவை அனைத்தும் பணிப்பொறுப்பாளர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்று எடுத்துரைக்கப்பட்டதாகவும் அக்கூட்டத்தில் கூறப்பட்டது.

பெண்களின் பங்கு மற்றும் பங்களிப்பு குறித்து  உரையாடிய சில குழுக்கள், கருத்தியல்கள் மற்றும் தப்பெண்ண அணுகுமுறைகள் இல்லாமல், திருஅவையின் உண்மையான பகுத்தறிவால் முன்வைக்கப்படுகிறதா என்பதைப் பற்றி சிந்திக்க அழைப்புவிடுத்தனர் என்றும், திருமுழுக்கு அருளடையாளத்தின் வழியாக பெண்களின் மனித மாண்பு உறுதிப்படுத்தப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டது.

பெண்கள் ஆறுதல் வழங்குபவர்களாக மட்டுமன்றி, திருஅவை வாழ்வில் முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெண்கள், இளையோர், பொதுமக்களை இணைத்துக்கொள்வது முக்கியம் என்றும், அச்சங்களை அடையாளம் கண்டு பெண்கள் மீதான அவமதிப்பு மனப்பான்மைக்கு வழிவகுப்பவற்றைக் குணப்படுத்த அடையாளம் காணவும் வலியுறுத்தப்பட்டது.

உள்ளூர் தேவாலயங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான உறவை ஆழமாக ஆராய்தல், அனுபவங்கள் மற்றும் எதார்த்தங்களிலிருந்து தொடங்குதல், கோட்பாடுகளை விட வாழ்க்கை முக்கியமானது என்று உணர்தல், "போர், வன்முறை மற்றும் மோதல்களால் பிளவுபட்ட ஏழைகளின் முகத்தைக் காணுதல், அவர்களின் வாழ்க்கை முறையை அடிமைப்படுத்துவதையும் தூரப்படுத்துவதையும் அகற்ற வழிவகுத்தல் போன்றவை குறித்தும் கருத்துக்கள் பகிரப்பட்டன.

No comments:

Post a Comment

Pope: Respect UN peacekeepers in Lebanon

  Pope: Respect UN peacekeepers in Lebanon After the Israeli army fires at UN peacekeeping forces in southern Lebanon, the Pope calls for th...