Friday, 11 October 2024

மனிதனின் மாண்பைப் பாதிக்கும் மரண தண்டனை

 

மனிதனின் மாண்பைப் பாதிக்கும் மரண தண்டனை


தேவையிலிருப்பவர்களுக்கு உதவாமல், தங்களது சொந்தத் தேவைகளைத் துரத்திக்கொண்டு போகும் வாழ்க்கை எவ்வளவு வெறுமையானது – திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மரண தண்டனை என்பது மனிதனின் மாண்பையும் மீற முடியாத தன்மையையும் பாதிப்படையச் செய்வதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், வாழ்வின் கடைசி நிலையிலும் கூட ஒருவர் மனம் மாற முடியும் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 10 வியாழனன்று ஹேஸ்டாக் மரணதண்டனை மற்றும் உலக வீடற்றோர் நாள் என்ற தலைப்பில் இரண்டு குறுஞ்செய்திகளைப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தேவையிலிருப்பவர்களுக்கு உதவாமல் தனது தேவைகளைத் துரத்திக்கொண்டு போகும் வாழ்க்கை எவ்வளவு வெறுமையானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனை என்பது மனிதனின் மீற முடியாத தன்மையையும் மாண்பையும் பாதிப்படையச் செய்வதால் எப்போதும் அது ஏற்றுக்கொள்ள முடியாதது. உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் இது ஒழிக்கப்பட வேண்டும் என்றும், வாழ்வின் கடைசி நிமிடம் வரை ஒரு நபர் மனமாற்றம் பெற முடியும் என்பதை நாம் மறந்துவிட முடியாது என்றும் முதல் குறுஞ்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

நல்லதைச் செய்வதை விட நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எத்தனை பேர் தங்கள் வாழ்நாளைக் கழிக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், தேவையிருப்பவர்களைப் பார்க்காமல், நமது சொந்த தேவைகளைத் துரத்தும் வாழ்க்கை எவ்வளவு வெறுமையானது என்று தனது இரண்டாவது குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment