1886ம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாந்தேதியன்று உருவாக்கப்பட்ட கண்டி மறைமாவட்டத்தில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கத்தோலிக்கர் உள்ளனர்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
இலங்கையின் கண்டி மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றிய ஆயர் Joseph Vianney Fernando அவர்களின் பணி ஓய்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மறைமாவட்டத்திற்கு, Chilaw மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றிவரும் ஆயர் Warnakulasurya Wadumestrige Devsritha Valence Mendis அவர்களை, அக்டோபர் 09, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார்.
1958ம் ஆண்டு Koralawella என்ற ஊரில் பிறந்த ஆயர் Valence Mendis அவர்கள், 1985ம் ஆண்டு அருள்பணியாளராகவும், 2005ம் ஆண்டு Chilaw மறைமாவட்ட வாரிசு ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.
Peradeniya பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர், அப்பல்கலைகழகத்தில் மெய்யியல் துறையில், பகுதிநேரப் பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இத்தாலியம், ஜெர்மன், இலத்தீன், ஆங்கிலம், சிங்களம் தமிழ் ஆகிய மொழிகள் இவருக்குத் தெரியும்.
இலங்கையின் தேசிய மெய்யியல் குருத்துவ கல்லூரியின் முதல் இயக்குனராக நியமிக்கப்பட்ட ஆயர் Valence Mendis அவர்கள், இலங்கை ஆயர் பேரவையின் பல்வேறு பணிக்குழுக்களின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
1886ம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாந்தேதியன்று உருவாக்கப்பட்ட கண்டி மறைமாவட்டத்தில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கத்தோலிக்கர் உள்ளனர்
No comments:
Post a Comment