மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
திருஅவை இளையோருக்கு ஆற்றும் பணிக்கு உயிரூட்டம் அளிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள கல்விகுறித்த உலகளாவிய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதவியாக, மூன்று கையேடுகளை வெளியிடவிருப்பதாக கத்தோலிக்க கல்விப் பேராயம் அறிவித்துள்ளது.
2020ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கிவைத்த கல்வி குறித்த உலகளாவிய ஒப்பந்தத்தை, உலக அளவில் கத்தோலிக்கப்பள்ளிகளும், பல்கலைக்கழகங்களும் நடைமுறைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
ஆயினும், சில நாடுகளில் இம்முயற்சிகளை, கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கங்கள் பின்னடைவு செய்திருப்பதை முன்னிட்டு, அந்த முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கத்தில், இந்த கையேடுகள் வெளியிடப்படுவதாக, கத்தோலிக்க கல்விப் பேராயம் அக்டோபர் 1, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இம்மாதம் 5ம் தேதி, வருகிற செவ்வாயன்று, இம்மூன்று கையேடுகளை வெளியிடவுள்ளதாகவும், இவை கல்வி குறித்த உலகளாவிய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கத்தோலிக்கப் பள்ளிகளுக்கு உதவும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
இதே அக்டோபர் 5ம் தேதி, பல்வேறு மதங்களின் இருபது பிரதிநிதிகளோடு கூட்டம் ஒன்று நடைபெறும் எனவும், அதே நாளில், இக்கையேடுகள் ஐந்து மொழிகளில் வெளியிடப்படும் எனவும், கத்தோலிக்க கல்விப் பேராயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment