Wednesday 13 October 2021

பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு வேலைவாய்ப்பு

 பாகிஸ்தானில் சிறுபான்மை சமுதாயத்தினர், சமுதாய வாழ்வின் எல்லா நிலைகளிலும் புறக்கணிக்கப்படுகின்றனர் மற்றும், பாகுபடுத்தப்படுகின்றனர் - பேராயர் அர்ஷத்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானில் சட்டரீதியாக சிறுபான்மை சமுதாயத்தினருக்கென்று ஒதுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ள விவகாரம் குறித்து, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவரான ராவல்பிண்டி பேராயர் ஜோசப் அர்ஷத் அவர்கள், அக்டோபர் 12 இச்செவ்வாயன்று செய்தி நிறுவனங்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை சமுதாயத்தினரை, பெரும்பான்மை சமுதாயத்தினரோடு ஒருங்கிணைத்தல் மற்றும், அவர்களின் நிதிநிலைமையை தன்னிறைவு பெறச்செய்தல் ஆகிய இரு நோக்கங்களுக்காக, பாகிஸ்தான் சட்டத்தில், சிறுபான்மை சமுதாயத்தினருக்கு 5 விழுக்காடு வேலைவாய்ப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மத்திய மற்றும் மாநில அரசுகள், இதுவரை குறைந்த அளவு வேலைவாய்ப்புக்களையே வழங்கியுள்ளன என்றுரைத்த பேராயர் அர்ஷத் அவர்கள், அந்நாட்டில் ஏறத்தாழ முப்பதாயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று, உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட சிறுபான்மை அவைத் தலைவர் Shoaib Suddle அவர்கள் அண்மையில் கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தானில் சிறுபான்மை சமுதாயத்தினர், சமுதாய வாழ்வின் எல்லா நிலைகளிலும் புறக்கணிக்கப்படுகின்றனர் மற்றும், பாகுபடுத்தப்படுகின்றனர் என்றுரைத்த பேராயர் அர்ஷத் அவர்கள், 5 விழுக்காட்டு விதிமுறையை நிறைவேற்றுவது, சிறுபான்மை சமுதாயத்தினரின் வாழ்வு முன்னேற உதவும் என்று கூறியுள்ளார். (AsiaNews)

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...