Tuesday, 12 February 2019

யாழ் மாநகரை பசுமைப்படுத்தும் செயற்திட்டம்

யாழ் மாநகரை பசுமைப்படுத்தும் செயற்திட்டம் வனங்களின் வளமை

மரங்கள், காடுகளுக்கு மட்டுமல்ல, நம் வீதிகளுக்கும், வீடுகளுக்கும் நெருங்கிய உறவுடையவை.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
யாழ் மாநகர வளாகத்தையடுத்த பகுதியில், 2018 டிசம்பர் மாதம் 27ம் தேதி  இடம்பெற்ற,  யாழ் மாநகரை பசுமைப்படுத்தும் திட்டத்தை, வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே அவர்கள், முக்கிய விருந்தினராகக் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு ஆரம்பித்து வைத்தார்.
இதனடிப்படையில் யாழ் மாநகர வளாக முக்கிய வீதி மற்றும் யாழ் துரையப்பா வளாகம் வழியாகச் செல்லும் பண்ணை வீதி ஆகிய முக்கிய வீதிகளின் நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு இருமருங்கிலும், நிழல் மரங்கள் நட்டு வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட ஆளுநர், யாழ் மாநகரை பசுமையான நகரமாக மாற்றுகின்ற செயற்பாடுகளையே தற்போது முன்னெடுத்து வருவதாகவும், அடுத்த ஆண்டிற்குள் மாநகரம், பசுமை நகரமாக மாற்றமடையுமெனவும் தெரிவித்துள்ளார்.
‘மரக்கன்றுகளை நடுவோம், யுகத்தை ஆரம்பிப்போம்’, ‘நாடு வளம்பெற காடுவளம் காப்போம்’, என்ற நல் முயற்சிகள் தொடரட்டும்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...