Tuesday, 12 February 2019

மறுசுழற்சி பேப்பரில் பென்சில்

மறுசுழற்சி பேப்பரில் பென்சில் மறுசுழற்சி பேப்பரில் பென்சில்

சூப்பர் ஹீரோஸ் என்ற இணையதள பக்கத்தின் மூலம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை சந்தை விலைக்கு நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்க முடியும்
மேரி தெரேசா - வத்திக்கான்
மறுசுழற்சி பேப்பரில் பென்சில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சூப்பர் ஹீரோஸ் இணைய பக்கத்தின் உரிமையாளர் கோவை திவ்யா அவர்கள் ஊடகம் ஒன்றிடம் பகிர்ந்துகொண்டவை....
எனது குடும்பம் பாரம்பரிய விவசாயக் குடும்பம். பருவமழை இல்லாத காரணத்தால் விவசாயத்தைச் செழிக்க வைக்கமுடியாமல், எத்தனையோ விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைச் செய்திகளாகப் படிக்கும்போது, அதை எளிதில் கடந்து போயிருக்கிறேன். ஆனால் அதே நிகழ்வு எங்கள் வீட்டில் நடந்தபோதுதான் உண்மை உயிரை உறைய வைத்தது. தாத்தாவின் மரணத்துக்குப்பின் ஐ.டி வேலையை விடுத்து, விவசாயத்தை என்னுடைய எதிர்காலமாகத் தேர்வு செய்தேன். என் நண்பன் விஷ்ணுவர்தனும் ஐ.டி வேலையை விடுத்து, விவசாயிகளுக்காக என்னுடன் கரம் கோத்தார். முதல் கட்டமாக விவசாயிகளின் மரணத்தைத் தடுக்கும் முயற்சியாக, விவசாயிகளையும் வாடிக்கையாளர்களையும் ஒருங்கிணைக்கும் சூப்பர் ஹீரோஸ் என்ற இணையதள பக்கத்தை உருவாக்கினோம். இந்தப் பக்கத்தின் மூலம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை சந்தை விலைக்கு நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்க முடியும். இரண்டு விவசாயக் குடும்பத்துடன் ஆரம்பித்த எங்களுடைய ஆன்லைன் பக்கத்தில் தற்போது 860 விவசாயக் குடும்பத்தினர் பங்கெடுத்து, இடைத்தரகர்கள் இல்லாத விவசாயத்தை உருவாக்கி உள்ளனர். பென்சில் தயாரிப்புக்காக, ஒரு வருடத்தில் பில்லியன் கணக்கில் மரங்கள் அழிக்கப்படுகின்றன என்ற தகவல் தெரியவந்தது. இது அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு மாற்று வழியை உருவாக்க நிறைய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டோம். அப்போதுதான் பேப்பரை மறுசுழற்சி செய்து பென்சில் உருவாக்கும் எண்ணம் தோன்றியது. பேப்பரின் அடர்த்தியை உறுதியாக்கி பேப்பர் பென்சில்கள் தயார் செய்தோம். பென்சிலுக்கான வெளிப்புற நிறத்துக்குப் பழங்கள், காய்கறிகள், பூக்கள் போன்றவற்றிலிருந்து சாயங்கள் எடுத்து இயற்கையான பென்சில்கள் எனக் குழந்தைகளிடம் கொடுத்து பரிசோதனை செய்தோம். குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார்கள். அதன்பின் பென்சிலின் பின்புறம், விதை கேப்சூல்களை வைத்து, பென்சிலை குழந்தைகள் பயன்படுத்தி சிறிதான பிறகு, மண்ணில் நட்டு வைத்தால் செடி முளைக்கும் வகையிலான விதையுடன்கூடிய பென்சில்கள், குழந்தைகளுக்குப் பிடித்த வாசனைகளுடன் கூடிய பென்சில்கள் போன்றவற்றை உருவாக்கி, சாதாரண பென்சிலின் விலைக்கே இந்த பென்சில்களையும் விற்பனை செய்தோம். அதன்பின் பேப்பர் பேனாக்கள் உருவாக்கத் தொடங்கினோம். மக்களும் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு நல்ல வரவேற்பு கொடுத்து, இயற்கை பாதுகாப்பில் பங்கெடுத்தார்கள். பென்சிலுக்கான விதைகள், சாயங்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை நேரடியாகவே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கிறோம். இப்போது அடுத்தகட்டமாக விதைகளுடன் கூடிய திருமண அழைப்பிதழ்கள், நோட்டுப் புத்தகங்கள் உருவாக்கி வருகிறோம். விவசாயத்திற்கும் இயற்கைப் பாதுகாப்புக்கும் எங்களால் முடிந்தவற்றைச் செய்ய முடிகிறது என்ற மனதிருப்தியும் கிடைக்கிறது. மாற்றங்களுடன் அடுத்தகட்ட இயற்கை வளர்ச்சி தொடரும் (நன்றி - விகடன்)

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...