Tuesday, 12 February 2019

புத்தரின் கனி

புத்தரின் கனி பழங்கள் மற்றும் காய்கறிகள் வியாபாரம்

மாங்க் பழம், பெரும்பாலும் தெற்கு சீனாவிலும் வடக்கு தாய்லாந்தின் சில பகுதிகளிலும் விளையக் கூடியது
மேரி தெரேசா - வத்திக்கான்
இயற்கை வழங்கும் ஒவ்வொரு இலை, பூ, காய், கனி என அனைத்திலும் நம் மனித வாழ்க்கைக்குத் தேவையான விடயங்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றிலும் இயற்கை தன் இரகசியத்தை ஒளித்து வைத்திருக்கிறது. அவற்றில் ஒன்று மாங்க் பழம்  (Monk fruit). இந்தப் பழத்தின் அறிவியல் பெயர் Siraitia grosvenorii. இதன் சீனப்பெயர் Luo han guo. இந்தப் பழத்தை முதன் முதலில் விளைவித்தவர்கள் சீனாவைச் சேர்ந்த துறவிகள் என்கிறார்கள். இதுதான் மாங்க் பழத்தின் பெயருக்கான மூல காரணம். இது ‘புத்தரின் கனி’ எனவும், சில இடங்களில் ‘கடவுளின் கனி’ எனவும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் தெற்கு சீனாவிலும் வடக்கு தாய்லாந்தின் சில பகுதிகளிலும் விளையக் கூடியது மாங்க் பழம். இது பச்சை நிறத்தில் இருந்தாலும் நம்மூர் கிர்ணி பழம் போன்ற ஒரு வகையான பழம்தான் மாங்க் பழம். பெரும்பாலும் காய்களே பச்சை நிறத்தில் இருக்கும். பழங்களாக கனிந்த பிறகு நிறம் மாறிவிடும். ஆனால், மாங்க் பழம், பச்சை நிறத்திலேயே இருக்கும். உலர்ந்தவுடன் ப்ரௌன் நிறத்தில் மாறிவிடும். உடல்நலத்தை  விரும்புகிறவர்களின் உணவுப்பட்டியலில் மாங்க் பழம் முக்கிய இடத்தைப் பெற்று வருகிறது. அண்மையில், இந்தப் பழத்தை இந்தியாவில் விளைவிக்க ஆராய்ச்சியாளர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். முதன்முறையாக இமயமலை சார்ந்த சில பகுதிகளில் மட்டும் மாங்க் பழம் பயிர் செய்யப்பட்டிருக்கிறது. இதனை நன்கு காய வைத்து அதிலிருந்து ஒரு வகை இனிப்பு தயாரிக்கிறார்கள். ஏனெனில், கரும்பு சர்க்கரையைவிட 150-லிருந்து 250 மடங்கு அதிகமான இனிப்பை அளிக்கக்கூடியதாக இப்பழம் இருக்கிறது. காஃபி, தேனீர், சாலட், சாஸஸ், ஓட்ஸ் சேர்த்த உணவுகள், தயிர் போன்றவற்றுடன் சேர்த்து மாங்க் பழத்தின் இனிப்பை சேர்த்து சாப்பிடலாம். *மாங்க் பழத்தை அப்படியே சாப்பிடலாம். நீரிழிவும், உடல்பருமனும், உலக அளவில் மிகப்பெரிய பிரச்சனையாக உருமாறிக் கொண்டிருக்கும் நிலையில் மாங்க் பழத்திற்கு பன்னாட்டுச் சந்தையில் மிக முக்கியமான இடம் காத்துக் கொண்டிருக்கிறது. எடை குறைப்பில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு நல்ல பழம் என்று சொல்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். இந்தியாவில் பல இடங்களிலும் உலர்ந்த பழமாகவே இது கிடைக்கிறது. (நன்றி குங்குமம் டாக்டர், தினகரன்)

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...