Tuesday, 12 February 2019

இறையன்பும், அயலவர் அன்பும் பிரிக்க முடியாதவை

இறையன்பும், அயலவர் அன்பும் பிரிக்க முடியாதவை திருத்தந்தை பிரான்சிஸ்

"இறைவனின் அன்பும், அயலவரின் அன்பும் இணைபிரியாதவை. ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; இவற்றை இணைத்து வாழ்வதே, விசுவாசிகளின் உண்மையான வலிமை" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
இறையன்பும், அயலவர் அன்பும் பிரிக்க முடியாதவை என்ற கருத்தை வலியுறுத்தும் வண்ணம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 9, இச்சனிக்கிழமை, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.
"இறைவனின் அன்பும், அயலவரின் அன்பும் இணைபிரியாதவை. அவை இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; இவற்றை இணைத்து வாழ்வதே, விசுவாசிகளின் உண்மையான வலிமை" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.
ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.
பிப்ரவரி 9, இச்சனிக்கிழமை முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1,865 என்பதும், அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 79 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.
இத்துடன், @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram முகவரியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, அவ்வப்போது வெளியிடப்பட்டு வரும் படங்கள் மற்றும் காணொளிகள், இதுவரை 662 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 59 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...