Saturday, 22 February 2014

குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமை முஸ்லிம்களுக்கும் உண்டு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமை முஸ்லிம்களுக்கும் உண்டு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Source: Tamil CNN
 266885003
இஸ்லாமிய விதிகளின்படி ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமை மறுக்கப்பட்ட ஷப்னம் ஹஷ்மி என்ற பெண், கடந்த 8 வருடங்களுக்கு முன் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
நீண்ட கால விசாரணைக்குப் பிறகு இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வெளியிடப்பட்டது.இஸ்லாமியர்களின் தனிப்பட்ட சட்டம் இதனைத் தடுத்தாலும் முஸ்லிம்களுக்கும் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமை உண்டு என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இன்று தீர்ப்பானது, நீதிமன்ற வரலாற்றிலேயே ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகின்றது.
இந்திய அரசியலமைப்பின் 44ஆவது பிரிவில் குறிப்பிட்டுள்ளபடி, சீரான குடியுரிமையியல் சட்டம் வெளியிடப்படும்வரை தனிப்பட்ட சட்டத்தைவிட ஒரு நாட்டின் சட்டங்களே முன்னுரிமை பெறும் என்று இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தத்தெடுக்கும் உரிமை என்பது ஒரு நாட்டின் சட்டத்தின்மூலம் அளிக்கப்படுவதாகும். இதனைத் தனிப்பட்ட எந்த சட்ட விதிகளும் தடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அனைத்துத் தனி நபர்களுக்கும் இந்த சட்டரீதியான அடிப்படை உரிமை உண்டு என்றபோதிலும் அதனை அறிவிப்பதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment