Thursday, 27 February 2014

சிறிலங்காவைச் சாடும் அமெரிக்காவின் முக்கிய அறிக்கை :நாளை வெளியிடுகிறார் ஜோன் கெரி

சிறிலங்காவைச் சாடும் அமெரிக்காவின் முக்கிய அறிக்கை :நாளை வெளியிடுகிறார் ஜோன் கெரி

Source: Tamil CNN
 John_F._Kerry
சிறிலங்கா உள்ளிட்ட உலகின் அனைத்து நாடுகளினதும் மனிதஉரிமைகள் நிலை தொடர்பான முக்கியமான அறிக்கை ஒன்றை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி நாளை வெளியிடவுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால், ஆண்டுதோறும் ‘நாடுகளின் மனிதஉரிமைகள் நடைமுறைகள்‘ என்ற பெயரில், உலகிலுள்ள அனைத்து நாடுகளினதும், மனிதஉரிமைகள் நிலை குறித்த அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
2013ம் ஆண்டுக்கான நாடுகளின் மனித உரிமைகள் நடைமுறைகள் அறிக்கை, நாளை காலை 11.30 மணியளவில், வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடக அறையில் வெளியிடப்படவுள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி இந்த அறிக்கையை வெளியிடவுள்ளார்.
இதையடுத்து, ஜனநாயகம், தொழிலாளர் விவகாரங்கள், மற்றும் மனிதஉரிமைகளுக்கான, பதில் உதவி இராஜாங்கச் செயலர் உஸ்ரா சீயா, இந்த அறிக்கை தொடர்பாக விளக்கமளிக்கவுள்ளதுடன், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளார்.
இந்த அறிக்கையில், சிறிலங்கா தொடர்பான முக்கியமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறப்படாமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளப்படாமை குறித்து தொடர்ச்சியாக அமெரிக்கா கவலை வெளியிட்டு வந்துள்ளது.
அண்மைக்காலமாக, ஊடகங்கள், மதசிறுபான்மையினர், மனிதஉரிமை ஆர்வலர்கள், நீதித்துறையினர் மீதான தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் கவலை வெளியிட்டு வந்துள்ளனர்.
இந்தநிலையில், இந்த அறிக்கையில் சிறிலங்கா குறித்து காட்டமான குற்றச்சாட்டுகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரத் தயாராகி வரும் அமெரிக்கா, ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாக இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் இந்த அறிக்கையை வெளியிடவுள்ளது முக்கியமானதாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...