Tuesday 25 February 2014

கருவில் இருக்கும் குழந்தைக்கு காது கேட்குமா?

கருவில் இருக்கும் குழந்தைக்கு காது கேட்குமா?

Source: Tamil CNN
கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு இயல்பான குழந்தைகளைப் போன்றே காது கேட்கும். கருவளர்ச்சியின் போது கருவின் 3-வது வாரத்திலேயே காதின் மொட்டு உருவாக்கம் நடைபெறுகிறது. ஏழாவது வாரத்தில் புறச்செவி
(வெளியில் இருக்கும் காது உறுப்புகள்) உருவாகிறது.
மேலும் மூன்று, நான்கு மாதங்களில் குழந்தையின் உடல் உறுப்புகள் அனைத்தும் உருவாகி வளர்ச்சியடையத் தொடங்குகின்றன. இதனால் கருவில் இருக்கும் குழந்தை தனது தாயின் குரலையும், தந்தையின் குரலையும் கருவிலேயே கேட்டுக் கொள்கின்றன.
இதனால் பிறந்தவுடன் தனது தாய், தந்தையரை எளிதாக உணர்ந்துக் கொள்கின்றன. நிறைமாத கர்ப்பிணியின் அருகில் அதிக சத்தங்களை உண்டாக்குவது (தீபாவளியின்போது வெடி ஓசை எழுப்பினால்) கருப்பையிலுள்ள குழந்தையை அதிர்ச்சிக்கு உள்ளாகிறது என்பது அனுபவ உண்மை.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...