Wednesday, 26 February 2014

ரயிலில் புகைப்பிடித்தால் ரயிலை நிறுத்தும் கருவி விரைவில்

ரயிலில் புகைப்பிடித்தால் ரயிலை நிறுத்தும் கருவி விரைவில்

Source: Tamil CNN
 train
ரயில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, ரயில் பெட்டியில் இருக்கும் பயணி யாராவது புகைப்பிடித்தால் உடனடியாக அந்த ரயில் நின்று விடும் வகையிலான தொழில்நுட்பம் விரைவில் முக்கிய அதிவிரைவு ரயில்களில் பொருத்தப்பட உள்ளது.
ஓடும் ரயிலில் புகைப் பிடிப்பவர்களால் ஏற்படும் தீ விபத்துகளை தவிர்க்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புகை தடுப்பு கருவி தொழில்நுட்பத்தை முதல் கட்டமாக ராஜ்தானி, சதாப்தி உட்பட 22 விரைவு ரயில்களில் பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த கருவி பொருத்தப்பட்டுள்ள ரயில் பெட்டியில் யாராவது சிகரெட் பிடிக்க தீ பற்ற வைத்தாலோ, புகை பிடித்தாலோ உடனே ரெயிலின் வேகம் குறையும். 2 அல்லது 3 நிமிடங்களில் ரயில் நின்று விடும். இது மட்டும் அல்லாமல், எந்த பெட்டியில் இருந்து புகை வந்தது என்பதை காட்டிவிடும்.
இந்த கருவி பொருத்தப்பட்டு, நல்ல பலன் கிடைத்தால், அடுத்த கட்டமாக அனைத்து ரயில்களிலும் பொருத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...