சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்காவோடு மொறிசியசும் இணைந்தது : வரும் வாரம் தீர்மானத்தின் முதன்வரைவு நகல்
வரும் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில், சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானவரைவில், அமெரிக்காவுடன் மொறிசியஸ் நாடும் இணைந்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏலவே ஐக்கிய ராஜ்ஜியம், சியரலியோன், மசிடோனியா மற்றும் மண்டினீக்ரோ (United kingdom, Sierra Leone, Macedonia and Montenegro )) ஆகிய நாடுகள், அமெரிக்காவுடன் கூட்டாக குறித்த தீர்மானத்தினை வரைய பங்கெடுத்திருந்த நிலையில், தற்போது மொரிசியஸ் நாடும் இணைந்துள்ளது.
கூட்டாக வரையப்படும் இத்தீர்மானத்தின் முதல்நகல் வரும் வாரம் வரையப்பட்டவுடன், அவ்வரைவில் உள்ளடக்கப்பட்ட வாசகங்கள் மற்றும் இதரவிடயங்கள் ஆகியன பல்வேறு நாடுகளுடன் உரையாடப்பட்டு, அந்நாடுகளின் அனுசரணை பெறப்படும்.
2012ம் ஆண்டு 40 நாடுகளும் 2013ம் ஆண்டில் 41 நாடுகள் இணை அனுசரணை வழங்கியிருந்தன என்பது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment