Thursday, 27 February 2014

இராணுவத்திற்கு உதவிய கேலமா வைக் காணவில்லை : அச்சத்தில் அரசாங்கம்

இராணுவத்திற்கு உதவிய கேலமா வைக் காணவில்லை : அச்சத்தில் அரசாங்கம்

Source: Tamil CNN
 download32
காட்டுப்பகுதியில் இடம் பெறுக்கின்ற குற்றங்களை கண்டுப்பிடிப்பதற்காக கடந்த 23 ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்ட ஆளில்லா விமானம் ‘கேலமா’ இன்று வரையிலும் திரும்பவில்லை என்று வனஜீவராசிகள் அமைச்சர் விஜித்த விஜய முனி சொய்சா தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்த நடைபெற்ற காலப்பகுதியில் புலிகள் இருந்த வனாந்தரங்களுக்கு மேலே சென்று தரவுகளை சேகரித்து வந்து இராணுவத்திற்கு உதவி வழங்கிய ஆளில்லா விமானம் ‘கேலமா’ இவ்வாறு காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடவளவ காட்டில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை கண்டறிவதற்காக இந்த விமானம் காட்டுப்பகுதிக்கு மேலாக ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்ட போதிலும் இதுவரையிலும் திரும்பவில்லை. சிங்கபூர் பல்கலைக்கழகம்,கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகம் ஆகிய இணைந்து சுமார் 3 இலட்சம் ரூபா செலவில் தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது இதேவேளை இந்த ஆளில்லா விமானம் வனாந்தரத்திற்குள் காணாமல் போகியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...