Saturday, 22 February 2014

ஒடியா மொழிக்கு செம்மொழி அந்தஸ்து

ஒடியா மொழிக்கு செம்மொழி அந்தஸ்து

Source: Tamil CNN
 1648057971Untitled-1
ஒடிசா மாநில மொழியான ஒடியா மொழி செம்மொழிகளின் பட்டியலில் இடம்பெறுவதற்கு இந்திய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
மிக பழமையான ஒடியா மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து கலைபண்பாட்டுத்துறை அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட மொழியியல் வல்லுநர்கள் ஒடியா மொழியை செம்மொழி பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்தனர். இதையடுத்து இப்போது செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. செம்மொழிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் இந்தோ ஆரிய மொழி இதுவாகும்.
இந்த பட்டியலில் ஏற்கனவே தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் இடம் பெற்றுள்ளது. ஒருமுறை செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டால், செம்மொழி மத்திய ஆய்வு மையத்தை அமைக்க முடியும். செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கு, அந்த மொழி ஏறத்தாழ 1500 முதல் 2000 ஆண்டுகள் பழமையானதாகவும், பிற மொழி தன்மையினை தன்னகத்தே கொண்டிராமல் தனியொரு இலக்கிய மரபை பெற்றிருத்தல் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment