உறுப்பு தானம் செய்து கின்னஸ் சாதனை படைத்த அரியானா மாநில மாணவர்கள்
அரியானா மாநிலம் ரோட்டக் நகரை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் உறுப்பு தானம் செய்து புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளனர்.
இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் மாணவர் அமைப்பாக இந்திய தேசிய மாணவர் பேரவை இயங்கி வருகிறது.
இந்த அமைப்பை சேர்ந்த 10 ஆயிரத்து 450 மாணவர்கள் ரோட்டாக்கில் நேற்று நடைபெற்ற விழாவில் எட்டே மணி நேரத்தில் உடல் உறுப்பு தான பத்திரங்களில் கையொப்பமிட்டு புதிய உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளனர்.
உலக சாதனைகளை பதிவு செய்து அங்கீகரிக்கும் கின்னஸ் நிறுவனம் சார்பில் இந்த விழாவில் பங்கேற்ற இந்தியாவின் தலைமை மேலாளர் இந்த புதிய சாதனைக்கான சான்றிதழை மாணவர்களிடம் வழங்கி வாழ்த்தினார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள தேசாய் பல்கலைக்கழக மாணவர்கள் 4 ஆயிரத்து 135 பேர் ஒரே நேரத்தில் உறுப்பு தானம் செய்தது தான் இதுவரை முந்தைய கின்னஸ் சாதனையாக இருந்தது.
நேற்றைய சாதனை குஜராத் மாணவர்களின் பழைய சாதனையை முறியடித்துள்ளது.
No comments:
Post a Comment