Thursday, 21 November 2013

டிவிட்டர் பயன்பாட்டில் முதலிடத்தில் சவுதி அரேபியா

டிவிட்டர் பயன்பாட்டில் முதலிடத்தில் சவுதி அரேபியா

Source: Tamil CNN
சமூக வலைதளமான டிவிட்டரை பயன்படுத்துவதில், சவுதி அரேபியா முன்னிலையில் உள்ளது. இதுகுறித்து, “பியர் ரீச்’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் கூறிஇணையதள வசதி கொண்ட சவுதி மக்களில், 32 சதவீதம் பேர், “டிவிட்டர்’ வலைதளத்தை பயன்படுத்துகின்றனர்.
இந்தியா, நைஜீரியா மற்றும் ஜெர்மனி நாட்டு மக்கள் மிகக் குறைவாக, 1 சதவீத அளவே, டிவிட்டரை பயன்படுத்துகின்றனர். இந்த வலைதளத்தை அறிமுகப்படுத்திய, அமெரிக்கா, டிவிட்டர் வலைதள பயன்பாட்டாளர்கள் வரிசை பட்டியலில், எட்டாவது இடத்தில் தான் உள்ளது. முதல் ஐந்து நாடுகளில், ஆங்கில மொழி பேசாத நாடுகளில், சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது.
சவுதி மற்றும் இந்தோனேஷிய நாட்டு மக்கள் கம்ப்யூட்டர் இல்லாத நிலையில், மொபைல் போன்களில், டிவிட்டரை பயன்படுத்துகின்றனர். டிவிட்டர் வலைதளத்தை பயன்படுத்துவோர், பெரும்பாலும் இள வயதினரே. 30 வயதிற்கு மேற்பட்டவர்களில், 20 சதவீதத்தினர் மட்டுமே, டிவிட்டரை பயன்படுத்துகின்றனர். யுள்ளதாவது:
முதல் பத்து இடங்களில், சவுதி அரேபியா, இந்தோனேஷியா, ஸ்பெயின், வெனிசுலா, அர்ஜென்டினா, பிரிட்டன், நெதர்லாண்ட், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் கொலம்பியா இடம் பெற்றுள்ளன. சீனாவில், இந்த வலைதளம் தடை செய்யப்பட்டிருப்பதால், இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை. இவ்வாறு, ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment