ஜனவரியில் தமிழ்நாட்டில் தமிழீழத்திற்கான மாதிரி பொது வாக்கெடுப்பு
தமிழீழம் என்பதே ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை தரும் என்பதை உலக நாடுகளிற்க்கு உணர்த்தும் வகையில், ஜனவரி 1 முதல் 15 வரை தமிழக மாணவர்களினால் தமிழகத்தில் தனி ஈழத்திற்கான மாதிரி பொதுவாக்கெடுப்பை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து தமிழக மாணவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :
இந்தியாவும் சர்வதேசமும் தொடர்ந்து தனி ஈழ கோரிக்கையை மட்டுப்படுத்தி வருகின்றன. இந்த சூழலில் நமது கோரிக்கையை அழுத்தமான முறையில் பதிவு செய்வதும் மக்களிடையே எடுத்துச் செல்வதும் இப்போது அவசியம்.
ஆகவே அரசாங்கமானது போராட்டத்தை ஒடுக்கிவரும் இந்த சூழலில் மக்களிடையே நமது கோரிக்கையை எடுத்து செல்வதற்காக தமிழகம் முழுவதும் தமிழீழத்திற்கான மாதிரி பொது வாக்கெடுப்பை இளைஞர்கள் மற்றும் மாணவர்களாகிய நாங்கள் முன்னெடுக்க இருக்கிறோம்.
ஐ.நா மன்றத்தின் அடுத்த அமர்வில் இந்த மாதிரி பொது வாக்கெடுப்பின் முடிவுகளை சமர்பிக்க இருக்கிறோம். கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், தனி நபர்கள் அனைவரும் தமிழர்களாக இணைந்து இந்த மாதிரி பொதுவாகெடுப்பினை வெற்றி பெறச் செய்வோம்.
இந்த நகர்வின் மூலமாக :-
தனி ஈழத்திற்கு ஆதரவாக இத்தனை பேர் தமிழகத்தில் இருக்கிறோம் என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறுதல், பொது வாக்கெடுப்பே நமது கோரிக்கை அதுவே தனி ஈழத்தை அமைத்துக் கொடுக்கும் என தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க முடியும், நமது கோரிக்கைகளை வலுவற்றதாக்கும் இந்தியாவின் சதிகளை முறியடிப்பதற்கு தமிழக மக்களிடம் மாதிரி பொது வாக்கெடுப்பை எடுக்கவுள்ளோம். எங்களது வாக்குபதிவு செய்யும் மையங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று இடங்களில் நிறுவ உள்ளோம் .பொதுமக்கள் அங்குவந்து அவர்களுடைய கருத்தை பதிவு செய்யலாம்.
இதுமட்டுமல்லாமல் மாணவர்கள் கிராமங்களுக்கு வீடு வீடாக சென்று வாக்கு பதிவு செய்யவுள்ளதுடன் பெரு நகரங்களில் மக்கள் கூடும் வணிக வளாகங்களுக்கு சென்று வாக்கு சேகரிகப்படவுள்ளது. மேலும், இணைய தளத்திலும் வாக்கு சேகரிப்பு நடைபெறும்.
இதுமட்டுமல்லாமல் புலம் பெயர் தேசங்களில் இருக்கும் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் நமக்கு ஆதரவாக அவரவர் நாடுகளில் மாதிரி பொது வாக்கெடுப்பை நடத்த உள்ளார்கள் என தமிழக மாணவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment