Saturday, 30 November 2013

சந்திரனில் துளசி செடி வளர்க்க தயாராகும் நாசா

சந்திரனில் துளசி செடி வளர்க்க தயாராகும் நாசா

Source: Tamil CNN
சந்திரனில் தாவரங்கள் வளரச்செய்யும் ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் ஈடுபட உள்ளது.
இதுகுறித்த ஆய்வை எதிர்வரும் 2015–ம் ஆண்டு தொடங்க உள்ளதோடு, அதற்கான ஆயத்த பணியை இப்போதே தொடங்கிவிட்டது.
அதற்காக எந்த வகை பயிர்களை முளைக்க வைத்து விளைய செய்ய முடியும் என ஆய்வு நடத்தியது.
அதில், டர்னிப் எனப்படும் சீனம் முள்ளங்கி, துளசி, ஓமம் மற்றும் அராபி டாப்சிஸ் என்ற ஒருவகை தாவரம் பயிரிட முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
அவற்றின் விதைகள் 5 முதல் 10 நாட்களில் முளைக்கும் தன்மை உடையது. இந்த விதைகளை முளைக்க வைத்து காய்கறி விளைவிப்பதன் மூலம் அங்கு மனிதன் தங்கி உயர் வாழ முடியுமா என்ற ஆய்வையும் தொடர்ந்து நடத்த நாசா திட்டமிட்டுள்ளது.
தாவரங்களை வளர்ப்பதற்காக சந்திரனுக்கு வருகிற 2015–ம் ஆண்டில் ஒரு ஆய்வு கூடம் அனுப்பப்படுகிறது. அதில் 5 முதல் 10 நாட்களில் முளைத்து வளரக்கூடிய டக்னிப், அராபி, டோப்சிஸ், ஓமம், துளசி செடி வகைகளின் விதைகளும் எடுத்து செல்லப்படுகின்றன.
இந்த தாவரங்கள் செழித்து வளரும் பட்சத்தில் அங்கு மனிதனும் வாழ முடியும் என நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
அதற்கான ஆய்வும் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முன்னோடி ஆராய்ச்சியாக தாவரங்கள் பயிரிடப்படுகிறது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...