ராக்கெட் அனுப்புவதற்கு முன் திருப்பதி கோவிலில் பூஜை செய்வது முட்டாள்தனம் : விஞ்ஞானி ராவ் பேட்டி
சென்ற வாரம் மத்திய அரசு சச்சின் டெண்டுல்கர், மற்றும் விஞ்ஞனி சி.என்.ராவ் ஆகிய இருவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கி கெளரவித்தது.
பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி ராவ், நேற்று பெங்களூரில் அளித்த பேட்டி ஒன்று கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விஞ்ஞானி ராவ், இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் சாடிலைட் குறித்த ஒரு கேள்விக்கு, ஒவ்வொரு ராக்கெட்டை அனுப்பும்போதும் திருப்பதிக்கு சென்று பூஜை செய்வது என்பது மூடநம்பிக்கையாகும். விஞ்ஞானிகள் கடவுளையும், ஜோசியத்தையும் நம்புவதை கைவிட்டு, தங்கள் திறமையில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், அறிவியல் துறைக்கு போதிய நிதி ஒதுக்காமல் அரசியல்வாதிகள் முட்டாள்தனமாக ஆட்சி செய்கின்றனர். அறிவியல் துறையில் முன்னேறாமல் இந்தியா வல்லரசு ஆக முடியாது என்று கூறினார்.
தான் தகவல் தொழில்நுட்பத்திற்கு எதிரானவன் இல்லை என்றும், சீனா பொன்று இந்தியாவும் அறிவியல் துறையில் அதிகளவு முதலீடு செய்து உலக வல்லரசு வரிசையில் இந்தியா இடம்பெற வேண்டும் என்பதே தனது நீண்டநாள் கனவு என்றும் அவர் கூறியுள்ளார்.
திருப்பதி கோவில் குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் அவர் அளித்த பேட்டி, கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக இணையதளங்களில் அவருடைய கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment