6 ஆயிரம் பெண்களை கற்பழித்த சிரியா ராணுவ வீரர்கள்
சிரியா நாட்டில் 2011–ம் ஆண்டில் இருந்து உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ராணுவத்தினரும் புரட்சி படையினரும் போரிட்டு வருகிறார்கள். இந்த போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 20 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர்.
ராணுவம் மிகவும் அத்துமீறல் செயல்களில் ஈடுபடுவதாக மனித உரிமை அமைப்பு புகார் கூறி உள்ளது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளை கொடுமை படுத்துவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
சிரியா போரில் இதுவரை 6 ஆயிரம் பெண்களை ராணுவத்தினர் கற்பழித்து இருப்பதாகவும், பெண்களையும், குழந்தைகளையும் மனித கேடயமாக வைத்து ராணுவத்தினர் போரிடுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment