ஹெலன்’ புயலை படம் பிடித்த மங்கல்யான்
செவ்வாய் கிரக விண்கலமான மங்கள்யான் ‘ஹெலன்’ புயரை தெளிவாகப் படம்பிடித்து அனுப்பியுள்ளது.
முழுக்க முழுக்க உள்ளூர் தொழில்நுட்பத்துடன் இஸ்ரோவின் முதல் முயற்சியாக மங்கள்யான் செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்ய கடந்த நவம்பர் 5ம் திகதி விண்ணுக்குக் கிளம்பியது.
ஐந்து கட்டங்களாக அதன் சுற்றுவட்டப் பாதை அதிகரிக்கப்பட்டு இப்போது நிலையாக பயணித்து வருகிறது.
இந்நிலையில் மங்கள்யான் விண்கலத்தில் உள்ள கருவிகள் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்தியாவுக்கு 68000 கிலோ மீட்டர் உயரத்தில் மங்கள்யான் பறந்தபோது அதன் மார்ஸ் கலர் கமெராவில் முதல் படம் எடுக்கப்பட்டது. கடந்த நவம்பர் 19, செவ்வாய்க்கிழமை இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரக் கரையோரம் நிலைகொண்டுள்ள “ஹெலன்’ புயலை மங்கள்யான் விண்கலம் தெளிவாகப் படம்பிடித்து அனுப்பியுள்ளது.
இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தை இஸ்ரோ நேற்றுதான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
மங்கள்யான் விண்கலத்தில் உள்ள கருவிகளைச் சரிபார்க்கும் ஒரு முயற்சியாகவே இந்த கமெராவில் படங்கள் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏராளமான படங்கள் எடுக்கப்பட்ட போதும் அவற்றில் ஒரு படத்தை மட்டுமே இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
பூமியிலிருந்து அருகில் 216 கிலோமீட்டரும், தொலைவில் 1 லட்சத்து 92 ஆயிரம் கிலோமீட்டரும் கொண்ட நீள்வட்டப்பாதையில் மங்கள்யான் விண்கலம் இப்போது சுற்றி வருகிறது.
டிசம்பர் 1ம் திகதி செவ்வாய் கிரகத்தை நோக்கிய பாதையில் விண்கலம் செலுத்தப்பட உள்ளது.
No comments:
Post a Comment