50 ஆயிரம் பேருடன் உலகைச் சுற்றிவரும் கப்பல்
பாடசாலைகள், வைத்தியசாலைகள், விமான நிலையம், ஆடம்பர விடுதிகள், பூங்காக்கள் ஆகியவற்றுடன் 50 ஆயிரம் பேர் பயணிக்கக் கூடிய இராட்சதக் கப்பல் அமெரிக்காவிலிருந்து உலகத்தைச் சுற்றிவரத் தயாராகவுள்ளது.
ரேடொம் ஸ்கிப் என்ற பெயருடைய இந்தக் கப்பல் மிதக்கும் உலகம் என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றினால் ஆடம்பர வர்க்கத்தினருக்காக இவ்வாறானதொரு கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து உலகத்தை சுற்றி வரவுள்ளதாக Fரேடொம் ஸ்கிப் இன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் 25 அடுக்கு மாடிகள் உண்டு. இங்கு குடியிருக்கும் 50 ஆயிரம் பேருக்கு மேலதிகமாக 30 ஆயிரம் விருந்தினர்கள் பயணிக்கக் கூடிய வாய்ப்பையும் கப்பல் வழங்குகிறது.கப்பல் உருவாக்கப்பட்டுள்ள விதம் குறித்தான வரைபடத்தை குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்பிறகு கப்பலில் உலகத்தைச் சுற்றிவர பதிவு செய்வோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment