Thursday, 31 January 2013

ROBERT JOHN KENNEDY: அகத்தியமலை/ பொதிகைமலை/ தமிழ்மலை அதிசயங்கள்

ROBERT JOHN KENNEDY: அகத்தியமலை/ பொதிகைமலை/ தமிழ்மலை அதிசயங்கள்: அகத்தியமலை/ பொதிகைமலை/ தமிழ்மலை அதிசயங்கள்: வீசும் காற்றின் திசையையும் அது ஏற்படுத்தும் விளைவுகளையும் பொறுத்து தென்றல், வாடை என பிரித்தனர...

அகத்தியமலை/ பொதிகைமலை/ தமிழ்மலை அதிசயங்கள்

அகத்தியமலை/ பொதிகைமலை/ தமிழ்மலை அதிசயங்கள்:

வீசும் காற்றின் திசையையும் அது ஏற்படுத்தும் விளைவுகளையும் பொறுத்து தென்றல், வாடை என பிரித்தனர் நம்மவர்கள். தென்கோடிக்கரையில் இருந்தாலும் குமரியில் இருந்து தென்றல் வீசுவதாக கூறுவதில்லை. பொதிகையில் இருந்து அது புறப்படுவதாகத்தான் பேச்சு. ‘சூரியனோடும், தமிழோடும் தோன்றிய மலை‘ என வில்லிபுத்தூரார் பாடியது தற்புகழ்ச்சியோ, உயர்வு நவிற்சியோ அல்ல. பூமி தோன்றிய போதே தோன்றிய போதே பொதிகையும் இருந்திருக்கலாம் என நிலவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். மலையில் வாழும் மனித குல முன்னோர்களான மந்திகளை பார்த்த உயிரியல் வல்லுநர்களும் இதை ஒத்துக்கொள்கின்றனர்.

உலகில் பல்லுயிர்ப்பெருக்கம் நிறைந்த 18 மலைத்தொடர்களில் அஸ்ஸாம் முதல் சிக்கிம் வரை உள்ள வடகிழக்கு மலைத்தொடரும், குஜராத் முதல் குமரி வரையுள்ள மேற்கு தொடர்ச்சி மலையும் அடங்கும். ஆனால், ஆன்மீக சிறப்பும் மூலிகை செழிப்பும் பொதிகையின் புகழை பல அடி உயர்த்தியுள்ளன.

தமிழ் தோன்றிய இடமாக கருதப்படுவதால் பொதிகை தமிழ் கூறும் நல்லுலகின் தனிக்கவனம் பெறுகிறது. அருவிகள் ஆர்த்தெழும் திருக்குற்றாலம் அடங்கலாக பொதிகை மலைத்தொடர் அகன்று அமைந்திருக்கிறது. இத்தொடரின் முத்தாய்ப்பாக அகத்தியர் தங்கிய ஏக பொதிகை இலங்குகிறது. குற்றாலம் தேனருவிக்கு மேலே உள்ள பரதேசி புடவு தமிழ் தோன்றிய இடம் இது என்பதற்கு சான்றாக உள்ளது. இங்கு பொறிக்கப்பட்டுள்ள 15 எழுத்துக்களை இதுவரை யாராலும் படித்தறிய முடியவில்லை. அந்த எழுத்துக்கள் தமிழின் வட்டெழுத்து, தமிழிக்கு முந்தைய ஆதி எழுத்துக்களாக அறியப்பட்டுள்ளன.

பாபநாசம் மேலணையில் படகு சவாரியோடு தொடங்குகிறது பொதிகை பயணம். மேலணைக்கு மேலே தமிழரின் ஆதி ஐங்குடிகளில் ஒரு குடியினரான பாணர்களின் தாகம் தீர்த்த பாணதீர்த்தம் உள்ளது. இது சித்தர்கள் தியானம் செய்த இடமாக கருதப்படுகிறது. இதையடுத்த கல்யாணி தீர்த்தம் அருகே உள்ள பாறையில் விஷ்ணு, ஆஞ்சநேயர், அகத்தியர் உருவச்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

பாணதீர்த்தத்துக்கு மேலே துலுக்க மொட்டை அமைந்துள்ளது. இங்குதான் இசுலாமியராக மாறி யாக்கோபு என பெயர்மாற்றம் பெற்ற சதுரகிரி சித்தர் ராமதேவர் தவம் செய்தார். இசுலாமியராக மதமாறியதால் இவர் மற்ற சித்தர்களால் ஒதுக்கப்பட்டதாக வரலாறு.

துலுக்கமொட்டையை அடுத்து காணிகள் வசிக்கும் இஞ்சிக்குழி உள்ளது. காணிகள் அகத்தியரால் தாங்கள் வடக்கிலிருந்து அழைத்து வரப்பட்டதாக கூறுகிறார்கள். குறவர், பளியர்கள் வரிசையில் தமிழக பழங்குடி மக்களாக குறிக்கப்பட்டாலும் மலையாளமே தங்களின் தாய்மொழி என்கின்றனர். பங்கிப்புல், ஆவோலை வேய்ந்த குடிசைகளில் வசிக்கும் இவர்களுக்கு கையில்லம், மூட்டில்லம் என குலப்பிரிவுகள் உள்ளன. இல்லம் பார்த்தே இல்லறம் நடத்துகின்றனர். இல்லம் மாறி காதலித்தால் காதலர்களை குனிய வைத்து முதுகில் கல் ஏற்றி தண்டிப்பார்கள். மணப்பெண்ணுக்கு தாவள்ளிக்கொடியில் தாலி அணிவிப்பது வழக்கம். ஆனால் கால வெள்ளத்தில் தங்கள் பழமையிலிருந்து மாறிவிட்டனர். காணிகளின் குலதெய்வம் தம்பிரமுத்தானின் கோயில் கண்ணாடி புல் பாறையருகே உள்ளது. தம்பிர முத்தானை கொக்கரை வாத்தியம் இசைத்து வழிபடுகிறார்கள்.

இஞ்சிக்குழிக்கு மேலே ஈத்தங்காடு நிறைந்த பூங்குளம் அமைந்துள்ளது. பொருநையாகிய தாமிரபரணி இங்கிருந்து தான் பாணதீர்த்தத்துக்கு வருகிறது. எழுத்தச்சன் மலையாளத்தை உருவாக்கியது போல் அகத்தியர் தமிழை இயற்றியதாக பலரும் தவறாக எழுதுகின்றனர். அவருக்கு முன்பே சிவனாலும் முருகனாலும் வளர்க்கப்பட்டதல்லவா தமிழ்? அகத்தியர் அவர்களிடம் இருந்து கற்றிருக்கலாம். அவரது அகத்தியத்திலேலே எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பது போல், இலக்கியத்திலிருந்து இலக்கணம் இயற்றப்படுவதாக கூறியுள்ளார். அவர் எழுதியது இலக்கண நூல் என்பதால் அதற்கு முன்பே இலக்கியம் இருந்திருப்பது உறுதியாகிறது. அகத்தியர் தமிழ் கற்றது பற்றி இருவேறு புராணக்கதைகள் கூறப்படுகின்றன. சிவபெருமான் திருமணத்துக்கு தேவர், முனிவரெல்லாம் கூடியதால் இமயம் தாழ்ந்தது. தெற்கே செல்ல அகத்தியருக்கு இறைவன் ஆணையிட்டார். ‘அங்குள்ள மொழி தெரியாதே‘ என்று தயங்கியதால் இறைவன் அவருக்கு தமிழறிவித்தாராம். இது ஒரு கதை.

பூங்குளத்தில் அபூர்வமான கருட மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இந்த பூக்களின் எண்ணிக்கையை வைத்தே வறுமையையும் செழுமையையும் காணி மக்கள் கணிக்கின்றனர். அதிகம் பூத்தால் மழை பொழியும் என்றும், குறைவாக பூத்தால் வறட்சி ஏற்படும் என்றும் நம்பிக்கை. இங்கு ஈத்தங்காடு நிறைந்திருப்பதால் அதை விரும்பியுண்ணும் யானைகள் கூடுகின்றன. சின்னச்சின்ன குன்றுகளாக அவை அசைந்து வரும் ஒய்யாரம் காண்போருக்கு கண் கொள்ளாக் காட்சி. பூங்குளத்துக்கு அருகிலேயே நெய்யாற்றுக்கு தண்ணீர் வழங்கும் பேயாறு ஓடுகிறது. கரை தொட்டு நிறைந்து வரும் இதில் ஒரு புத்துணர்ச்சிக்குளியல் போடலாம்.

பூங்குளத்தை கடந்தால் சங்குமுத்திரையை அடையலாம். திருவாங்கூர் சமஸ்தான எல்லையான அங்குள்ள பாறையில் சங்கு சக்கர முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மேலேறினால் ஏக பொதிகையை அடையலாம். சங்கு முத்திரையை அடையாளமாக கொண்டு பார்க்கும் போது ஏக பொதிகை தமிழக எல்லைக்குள் தென்பட்டாலும் அது கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அகத்தியரை தரிசிக்க செல்வோர் அம்மாநில அரசின் அனுமதியை பெறவேண்டியுள்ளது. கேரளாவிலிருந்து சுற்றுலா வருவோரும் நமது பகுதி வழியாகவே பொதிகைக்கு ஏற வேண்டியுள்ளது. இதனால் இதுவரை அனுமதி மறுக்கவில்லை. ஆனால், மங்கல தேவி கண்ணகியை வழிபட விடாமல் வழிமறிக்கும் நிலை வராமலிருக்க சரியாக அளந்து எல்லையை மறுநிர்ணயம் செய்தால் நல்லது. பழனி, கருவூர் என பல ஊர்கள் சித்தர்கள் சமாதியடைந்ததால் சிறப்பு பெறுகின்றன. ஆனால் பொதிகையோ அகத்தியர் வாழ்ந்ததால் பெருமையடைகிறது. அவர் சமாதியடையாமல் அரூபியாக காற்றில் உலாவுவதாகவும், தைப்பூசம் முதல் சித்ரா பவுர்ணமி வரை நிறைநிலா நள்ளிரவுகளில் தரிசனம் தருவதாகவும் ஆன்மீகவாதிகள் நம்புகின்றனர்.

பொதிகையின் தென்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் கல்லால் மூடப்பட்ட குகை ஒன்று உள்ளது. அகத்தியர் ஏடுகள் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பொதிகைக்கு 1 கிலோ மீட்டர் மேற்கே பாறையில் முகக்க குறையாத நீர் ஊற்று உள்ளது. அது அகத்தியர் தாகசாந்திக்காக அமைந்த ஊற்றாம். கோடையிலும் அந்த ஊற்று வற்றுவதில்லை. சங்குமுத்திரை பகுதியில் மூலிகைகளை அரைக்கும் பழங்கால ஆட்டு உரல்கள் பல இன்னும் காணப்படுகின்றன.

ஏக பொதிகையை அகத்திய கூடம் என்றே கேரளத்தினர் அடையாளம் காட்டுகின்றனர். தமிழ்நாட்டில் அகத்தியர் கதையும் அவ்வை கதையும் பலவித அனுமானங்களை ஏற்படுத்துகின்றன. மதுவுண்டு களித்த அதியமானின் தோழி, காதலை பாடிய இளமங்கை என இலக்கியத்தில் பல தோற்றம் தருகின்ற அவ்வையை கம்பூன்றிய மூதாட்டியாக கடற்கரையில் நிறுத்தியது போல், மொழியிலக்கணம் இயற்றிய புலவர், நிருதர்களையும் இராவணனையும் விரட்டிய ஈஸ்வரனின் தளபதி என புராணங்களில் பல அவதாரம் எடுத்த அகத்தியரை கமண்டலம் ஏந்திய குறுமுனியாகவே மலையில் நிறுத்தியுள்ளனர். இலக்கியங்களை ஆராய்ந்தால் பத்துக்கு மேற்பட்ட அவ்வைகளையும் அகத்தியர்களையும் காணமுடிகிறது. இருவரை பற்றியும் கட்டுக்கதைகளே அதிகம் புனையப்பட்டுள்ளன.

பொதிகை மலைத்தொடரில் தான் தமிழகம் எங்கும் கோயில் கொண்டுள்ள சாஸ்தாக்களுக்கெல்லாம் மூல சாஸ்தாவான சொரிமுத்தையனார் கோயில் உள்ளது. ஐயப்பன் பிறப்பும் வளர்ப்பும் இங்கு நிகழ்ந்ததாக கர்ண பரம்பரை கதை உள்ளது. கல்லில் தோன்றி கடலில் கலக்கும் வரையில் பொருநையில் நூற்றுக்கு மேற்பட்ட தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. அவற்றுள் மலையடிவாரத்தில் உள்ள தாமிரபரணி, வேத தீர்த்தங்களும், மலை மீது உள்ள கல்யாண, பைரவதீர்த்தங்களும் முக்தியும் சித்தியும் அளிக்கும் என்பது பக்தர்கள் எண்ணம். இராவணன் மாவீரன், இசைவாணன் என்பதோடு சிறந்த சித்த மருத்துவனும் கூட. அவன் பொதிகை மலைக்கு பலமுறை வந்ததாக புராணங்கள் மூலம் தெரியவருகிறது.

புவிப்பரப்பில் முதலில் தோன்றிய நுண்ணுயிர் முதல் மனிதனுக்கு முந்தைய மந்தி வரை பொதிகையில் உள்ளன. இது குறித்து வனத்துறை துணை இயக்குநர் பத்திரசாமி கூறுகையில்,‘ இந்த பிரபஞ்சத்தில் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த வெடிப்பில் விழுந்த சிறு துண்டாகிய பூமி 500 கோடி வருடங்களுக்கு முன் குளிர்ச்சியடைந்தது பூமியானது. அதில் 300 கோடி வருடங்களுக்கு முன்பு உயிர்த்தோற்றம் உண்டானது என்கின்றனர். பூமி குளிர்ந்து ஒருவித வடிவத்துக்கு வந்து உயிர்கள் உருவான காலத்திலேயே பொதிகைகையும் தோன்றியிருக்கலாம். பொதிகை மலை 6000 சதுர கிமி பரப்பு கொண்டது. இதில் அகத்திய மலையின் உயரம் 1868 மீட்டர். நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள் தமிழ்நாட்டில் 76 உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் 121 உள்ளன. 27 வகை மீன், 9 வகை தவளைகள் பொதிகையில் மட்டுமே காணப்படுகின்றன. 177 ஊர்வனவற்றில் 157 வகைகள் மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டும் உள்ளன. 39 வகை இங்கு மட்டுமே வாழ்கின்றன. கரும்பு, சோளம், கம்பு, ராகி போன்ற உணவு தானியங்கள் 260ல் 60க்கு மூலவித்து இங்குள்ளது. மீன்வகை 165. இங்கோ 218 உள்ளன.‘ என்றார்.

மூலிகைகளின் மூல ஸ்தானம் பொதிகை மலை.‘ மூட்டு வலியை போக்கும் பளிங்கு காய், தாமிரத்தை பஸ்பமாக்கும் கல் தாமரை விஷம் முறிக்கும் கீரிக்கிழங்கு, சர்க்கரை நோயை போக்கும் பொன்கொரண்டி, என பல்வேறு மூலிகைகள் பொதிகையில் உள்ளன. மருத்துவ குணம் நிரம்பிய கள் சுரக்கும் ஆலம், சாலம், காந்தம், கூந்தல் உள்ளிட்ட 7 வகை பனைகள், 10 ஆண்டுகளில் காய்த்து, காயில் உள்ள விதையால் கர்ப்பப்பை புற்றை அகற்றும் கல்வாழை, பட்டையால் பாம்பிம் நஞ்சை இறக்கும் ஞாறவாழை உள்ளிட்ட 7 வகை வாழைகள் இங்கு வளர்கின்றன. உலகில் உள்ள பூக்கும் தாவரங்கள் 5640ல் 2654 வகை இங்கு உள்ளன. 600க்கு மேற்பட்ட மூலிகைகள் இங்கு மட்டுமே வளர்கின்றன.‘ என்கிறார் தமிழ் மருத்துவக்கழக தலைவர் மைக்கேல் செயராசு.

வார்னிஷ் தயாரிக்க உதவும் குலவு, விஷக்கடி வீரியத்தை போக்கும் புலவு, சிறுநீர்ப்பை கல்லடைப்பை நீக்கும் சர்க்கரை வேம்பு, தெம்பூட்டும் பாப்பிக்கொடி,தலைமுடியை கருகருவென வளர வைக்கும் கருநீலி, வசியம் செய்ய பயன் படும் மயிற்கண் போன்ற மயிற்சிறகை, சர்க்கரை வ் உதவும் கட்டுக்கொடி, கட்டியை உடைக்கவும், சத்ரு சம்ஹாரத்துக்கும் பயன்படுத்தும் செருப்படை போன்ற மூலிகைகள் இங்கு கொழித்துக்கிடப்பதாக விக்கிரமசிங்கபுரம் ஜெயராஜ் சுவாமிகள் கூறுகிறார்.

மானிடனின் முன்னோடிகளான குரங்கு, தேவாங்கு, மந்திகளோடு சிங்கவால் குரங்கும் இங்கு உண்டு. 895 சதுர கிலோ மீட்டரில் பரந்துள்ள களக்காடு&முண்டன்துறை வனவிலங்கு சரணாலயம் பறக்கும் அணில், மரநாய் முதல் யானை, புலி, கரடிகளுக்கு வாச ஸ்தலமாக இருக்கிறது. சிங்கங்களும் இங்கு இருந்திருக்கலாம் . சிங்கம்பட்டி, சிங்கம்புணரி என சிங்கப்பேர் கொண்ட சுற்றுப்புறக்கிராமங்களே இதற்கு சாட்சி. சிங்கம்பட்டி ஜமீனின் ராஜ முத்திரையும், இதே மலையின் தொடர்ச்சியான ஸ்ரீபாத மலை என்னும் ஆதம் மலையை கொண்ட இலங்கை அரசின் இலச்சினையும் சிங்கமாக இருப்பது அசைக்க முடியாத சான்று. மேலும், இலங்கையிலும் இங்கும் வாழும் மனித இனம் மட்டுமல்ல, உயிரினங்களும் ஒன்றே என்று உயிரியல் உறுதிப்படுத்துகிறது.

முன்னமே சொன்னது போல் அமைதியான தென்றலும், அமுதமான தமிழும், அருசுவையான மூலிகை நீரும் அருந்தி ஆரவாரமான நகர சூழலை விட்டு சொர்க்கானுபவம் பெற பொதிகை சுற்றுலா பொருத்தமாக தோன்றுகிறதல்லவா?

ROBERT JOHN KENNEDY: Fr. Joseph Benedict passed away today. Funeral on ...

ROBERT JOHN KENNEDY: Fr. Joseph Benedict passed away today. Funeral on ...

Fr. Joseph Benedict passed away today. Funeral on 01/02/13 at 4 pm in the Bishop's House










ROBERT JOHN KENNEDY: தேநீர்

ROBERT JOHN KENNEDY: தேநீர்: தேநீர் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் விரும்பி அருந்தப்படும் ஒரு பானம் தேநீர். இது , கமெலியா சினென்சிஸ்( Camellia sinensis) எனப்படும் த...

தேநீர்

தேநீர்

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் விரும்பி அருந்தப்படும் ஒரு பானம் தேநீர். இது, கமெலியா சினென்சிஸ்(Camellia sinensis) எனப்படும் தாவரஇனச் செடியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பொதுவாக, பச்சைத் தேநீர், ஊலூங் தேநீர், கருப்புத் தேநீர், வெண்மைத் தேநீர், புவார்த் தேநீர் என ஐந்து வகையான தேநீர்கள் உள்ளன. இவை எல்லாமே ஓரே செடியைச் சேர்ந்தவை என்றாலும், அந்தச் செடியிலிருந்து குருத்து இலைகளைப் பறித்த பின்னர் அவற்றைப் பதப்படுத்தும் முறைகளில் இவை மாறுபடுகின்றன. தேநீர் வரலாற்றோடு தொடர்புடைய புகழ்பெற்ற சீனக் கதை ஒன்று உள்ளது. இது கி.மு. 2,737ல் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. வேளாண்மையையும், சீன மருத்துவ முறையையும் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படும் Shandong என்னும் சீனப் பேரரசர், ஒரு நாள் வெண்ணீர் குடித்துக்கொண்டு இருந்தபோது, காற்று வீச, அருகிலிருந்த ஒரு மரத்திலிருந்து சில இலைகள் அவர் அருந்திக்கொண்டு இருந்த வெண்ணீரில் விழுந்தனவாம். அப்போது நீரின் நிறம் மாறுவதை அவர் கவனித்தார். புதிய விடயங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டிருந்த பேரரசர் Shandong, அந்த நீரில் ஒரு முடக்கு அருந்தி அதன் வாசனையையும், உற்சாகம் தரும் இயல்பையும் அறிந்து வியந்தாராம். தென்மேற்கு சீனா, வடகிழக்கு இந்தியா, வடக்கு பர்மா, திபெத்து ஆகிய பகுதிகளிலே முதலில் தேயிலை பயிரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள் தேயிலையை ஐரோப்பாவுக்கு எடுத்துச் சென்றனர். அச்சமயம் தேநீர், Chá என்ற பெயரில் புழக்கத்திலிருந்தது. உலகில் அதிகமாகத் தேநீர் அருந்தும் நாடான இந்தியா தவிர, சீனா, கென்யா, இலங்கை துருக்கி ஆகிய நாடுகளே உலகில் அதிகமாகத் தேயிலையை உற்பத்தி செய்கின்றன. 2010ம் ஆண்டில் உலகில் 45 இலட்சத்து 20 ஆயிரம் டன்களுக்கு மேலாக, தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. உலகில் அதிகமாகத் தேயிலையை இறக்குமதி செய்யும் நாடு இரஷ்யா.






ROBERT JOHN KENNEDY: Catholic News in Tamil - 31/01/13

ROBERT JOHN KENNEDY: Catholic News in Tamil - 31/01/13:   1. அலகாபாத் ஆயர் பதவி விலகும் கோரிக்கை திருத்தந்தையால் ஏற்பு 2. நம்பிக்கை ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய பத்து அம்சங்கள் - இந்தியத் ...

Catholic News in Tamil - 31/01/13

 
1. அலகாபாத் ஆயர் பதவி விலகும் கோரிக்கை திருத்தந்தையால் ஏற்பு

2. நம்பிக்கை ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய பத்து அம்சங்கள் - இந்தியத் திருஅவை

3. நாட்டின் உண்மை நிலையை அறிய முடியாமல் மக்கள் துன்புறுகின்றனர் - அலெப்போ பேராயர் Marayati

4. குழந்தை வளர்ப்பையும், திருமண உறவையும் பிரிப்பதற்கு பிரித்தானிய அரசு மேற்கொள்ளும் முயற்சி ஆபத்தானது - இங்கிலாந்து ஆயர்கள்

5. 'இளையோருக்கு நீதியான தண்டனைகள் வழங்குதல்' - அமெரிக்க ஆயர்களின் முயற்சி

6. மகா கும்ப மேளாவையொட்டி கத்தோலிக்கக் குழு நடத்தும் வீதி நாடகங்கள்

7. உலக இளையோர் நாள் நிகழ்ச்சிகளுக்கு பிரேசில் நாட்டின் சிறைக் கைதிகள் ஏற்பாடுகள்

8. நோய் தடுப்பு மருந்துகளுடன் தகுந்த அளவு உணவைக் கொடுப்பதால் பல இலட்சம் குழந்தைகள் இறப்பதைத் தடுக்கமுடியும்

------------------------------------------------------------------------------------------------------

1. அலகாபாத் ஆயர் பதவி விலகும் கோரிக்கை திருத்தந்தையால் ஏற்பு

சன.31,2013. கடந்த 24 ஆண்டுகளாக அலகாபாத் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் இஸிடோர் பெர்னான்டெஸ் அவர்கள் பதவி விலக விரும்பி அனுப்பிய கோரிக்கையை திருச்சட்டம் 401, 2ம் பிரிவின்படி, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வியாழனன்று ஏற்றுக்கொண்டார்.
ஆயர் பெர்னான்டெஸ் அவர்களுக்குப் பதிலாக, ஒய்வு பெற்ற ஆஜ்மீர் ஆயர் இக்னேசியஸ் மெனெசெஸ் அவர்களை அலகாபாத் மறைமாவட்ட மேற்பார்வையாளராக, திருத்தந்தை நியமித்துள்ளார்.
1947ம் ஆண்டு மங்களூரில் பிறந்த ஆயர் இஸிடோர் பெர்னான்டெஸ், 1972ம் ஆண்டு குருவாகவும், 1988ம் ஆண்டு ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.
இதற்கிடையே, அண்மையில் கர்தினாலாக உயர்த்தப்பட்ட சீரோ மலங்கரா தலைமைப் பேராயர் Baselios Cleemis Thottunkal அவர்களை, கீழைரீதி திருப்பேராயத்தின் உறுப்பினராகவும், பல்சமய உரையாடல் அவையின் உறுப்பினராகவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வியாழனன்று நியமித்துள்ளார்.

2. நம்பிக்கை ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய பத்து அம்சங்கள் - இந்தியத் திருஅவை

சன.31,2013. நடைபெற்றுவரும் நம்பிக்கை ஆண்டில், இவ்வுலக செல்வங்களின் மீது கொள்ளும் பற்றிலிருந்து விடுபட்டு, சமுதாய நீதிக்கு தங்களையே அர்ப்பணமாக்க ஒவ்வொரு கிறிஸ்தவரும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று இந்தியத் திருஅவை கூறியுள்ளது.
சனவரி 29, இச்செவ்வாயன்று மங்களூர் ஆயர் Aloysius Paul D'Souza தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நம்பிக்கை ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய பத்து அம்சங்கள் வெளியிடப்பட்டன.
ஆசிய ஆயர்கள் பேரவையின் மனிதவள மேம்பாட்டுப் பணிக்குழுவின் பொதுச் செயலர் அருள்தந்தை நித்திய சகாயம் முன்னின்று நடத்திய இக்கூட்டத்தில், நம்பிக்கை ஆண்டில் ஒவ்வொரு மறைமாவட்டமும் கடைபிடிக்கக்கூடிய பத்து அம்சங்கள் வெளியிடப்பட்டன.
குழந்தைகளுக்கும், இளையோருக்கும் நமது விசுவாசப் பாரம்பரியத்தைச் சொல்லித் தருதல், குடும்பம், இளையோர், வயது முதிர்ந்தோர் மத்தியில் பணிபுரிய 'நம்பிக்கை அணிகளை' உருவாக்குதல், தேவையில் இருப்போருடன் ஒருமைப்பாட்டை வளர்த்தல், நெருங்கி வரும் தவக்காலத்தில் ஒப்புரவை வளர்க்கும் வழிகளைத் தேடுதல் என்பன உட்பட்ட பத்து அம்சங்கள் இக்கூட்டத்தில் வெளியிடப்பட்டன.

3. நாட்டின் உண்மை நிலையை அறிய முடியாமல் மக்கள் துன்புறுகின்றனர் - அலெப்போ பேராயர் Marayati

சன.31,2013. கடந்த ஓராண்டுக்கும் மேலாக, சிரியாவில் நிலவிவரும் வன்முறைகள் நிறைந்த வாழ்வுநிலை, பயங்கரங்கள் மீது பற்றுகொள்ளும் ஆபத்தான பழக்கத்தை மக்கள் மத்தியில் உருவாக்கி வருகிறது என்று அலெப்போவின் ஆர்மீனியக் கத்தோலிக்கப் பேராயர் Boutros Marayati கூறினார்.
அலெப்போ நகரில் இச்செவ்வாயன்று பல இளையோர் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பேராயர் தன் வருத்தத்தை இவ்வாறு வெளியிட்டார்.
ஒரு சில நாட்களுக்கு முன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கொலைகள் ஏற்கனவே ஒரு தூரத்து நினைவாக மாறுமளவுக்கு, ஒவ்வொரு நாளும் வெவ்வேறான பயங்கரங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன என்று பேராயர் Marayati, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஒவ்வொரு வன்முறையின்போதும் வெளிவரும் தகவல்களை சரிவர ஆய்வு செய்வதற்குள் அடுத்தடுத்து வன்முறைகள் நிகழ்வதாலும், உண்மையும் வதந்திகளும் கலந்து வருவதாலும், நாட்டின் உண்மை நிலையை அறிய முடியாமல் மக்கள் துன்புறுகின்றனர் என்று பேராயர் Marayati சுட்டிக்காட்டினார்.

4. குழந்தை வளர்ப்பையும், திருமண உறவையும் பிரிப்பதற்கு பிரித்தானிய அரசு மேற்கொள்ளும் முயற்சி ஆபத்தானது - இங்கிலாந்து ஆயர்கள்

சன.31,2013. குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்ற உண்மைக்குப் புறம்பாக, பாலியல் உறவுகளை உறுதி செய்யும் அமைப்புக்கள் உலகில் இருப்பதற்கு அர்த்தமில்லை என்று இங்கிலாந்தில் உள்ள கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
ஒரே பாலினத் திருமணத்தைச் சட்டமாக்கும் வகையில் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் தற்போது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இவ்விவாதங்களில் பங்கேற்கும் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசிய ஆயர்கள், குழந்தை வளர்ப்பையும், திருமண உறவையும் பிரிப்பதற்கு பிரித்தானிய அரசு மேற்கொள்ளும் முயற்சி ஆபத்தானது என்று கூறினர்.
குடும்பத்தின் அடிப்படை இலக்கணத்தை மாற்றும் அரசின் முயற்சிக்கு, பிரித்தானிய மக்களில் பெரும்பான்மையானவர்கள் விரும்பாதபோது, அரசு இம்முயற்சியை மேற்கொள்வது நாட்டின் சட்ட வரைவு முறைகளுக்கு எதிரானது என்றும் ஆயர்கள் கூறியுள்ளனர்.
இவ்வகை சட்ட மாற்றம் தேவையா என்ற கேள்வியை மக்கள் முன் வைக்காத அரசு, இச்சட்டத்தை எவ்வகையில் மாற்றலாம் என்ற கேள்வியை மட்டும் மக்கள் முன் வைப்பது அடிப்படையில் தவறான செயல்முறை என்றும் ஆயர்கள் குறை கூறியுள்ளனர்.

5. 'இளையோருக்கு நீதியான தண்டனைகள் வழங்குதல்' - அமெரிக்க ஆயர்களின் முயற்சி

சன.31,2013. 18 வயதுக்கு உட்பட்ட இளையோருக்கு, விடுவிக்கபடமுடியாத ஆயுள் தண்டனை வழங்குவது, அவர்களுக்கு அனைத்து வாய்ப்புக்களையும் மறுத்துவிடுகிறது என்று அமெரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
'இளையோருக்கு நீதியான தண்டனைகள் வழங்குதல்' என்ற கருத்துடன் அமெரிக்க ஆயர் பேரவையின் உள்நாட்டு நீதி மற்றும் மனிதவள மேம்பாடு என்ற பணிக்குழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இம்முயற்சிகளுக்கு, 100க்கும் மேற்பட்ட பல்வேறு மத அமைப்புக்களும், சமுதாய அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இளையோரில் பலர், மிகுந்த வன்முறைகளை வெளிப்படுத்தி சமுதாயத்திற்கு ஆபத்தாக இருக்கின்றனர் என்றாலும், அவர்களை வயது வந்தவர்களோடு ஒன்றாகக் கருதி, அவர்களுக்கு வழங்கப்படும் அதே தண்டனையை வழங்குவது சரியல்ல என்று ஆயர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
18 வயதுக்கு உட்பட்டவர்கள் வெளியேற முடியாத ஆயுள் தண்டனை, அமெரிக்காவில் 38 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அந்நாட்டில் தற்போது 18 வயதுக்கு உட்பட்ட ஆயுள்தண்டனைக் கைதிகள் 2500க்கும் அதிகமானோர் என்றும், இவர்களில் பெரும்பான்மையானவர்கள் கருப்பினத்தைச் சார்ந்தவர்களே என்றும் ICN என்ற கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

6. மகா கும்ப மேளாவையொட்டி கத்தோலிக்கக் குழு நடத்தும் வீதி நாடகங்கள்

சன.31,2013. இந்தியாவின் அலகாபாத் நகரில் தற்போது நடைபெற்று வரும் மகா கும்ப மேளாவையொட்டி, மத நல்லிணக்கத்தையும், மனித நேயத்தையும் வலியுறுத்தும் வீதி நாடகங்களை கத்தோலிக்கக் குழு ஒன்று நடத்தி வருகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாபெரும் இந்து மதப் புனித விழா, சனவரி 14ம் தேதி முதல், பிப்ரவரி 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, இந்திய மறைப்பணித் துறவுச் சபை என்ற அமைப்பினரால் பல்வேறு வீதி நாடகங்கள் நடைபெற்று வருகின்றன.
HIV-AIDS நோய் பற்றிய விழிப்புணர்வையும், இந்நோய் கண்டவர்களை மனித சமுதாயம் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தும் நாடகங்கள் சனவரி 26, 27, 28 ஆகிய நாட்களில் நடைபெற்றன.
கங்கை நதியில் ஏற்படும் அளவுக்கு மீறிய மாசுகள் பற்றியும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றியும் விழிப்புணர்வை உருவாக்கும் நாடகங்களை இந்திய மறைப்பணித் துறவுச் சபையின் Vishwa Jyoti என்ற குழுவினர் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
மனிதர்கள் கூடிவரும் எண்ணிக்கையில் உலகச் சாதனை படைக்கும் கும்ப மேளா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சாதுக்களில் பலர், கங்கை மாசுபட்டு வருவதை கண்டித்து, இவ்வாண்டு கங்கையில் குளிக்கப்போவதில்லை என்ற தீர்மானம் எடுத்திருப்பதாக UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

7. உலக இளையோர் நாள் நிகழ்ச்சிகளுக்கு பிரேசில் நாட்டின் சிறைக் கைதிகள் ஏற்பாடுகள்

சன.31,2013. வரும் ஜூலை மாதம் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்ச்சிகளுக்கு இளையோரை வரவேற்க அந்நாட்டின் சிறைக் கைதிகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
இந்த இளையோர் நாள் நிகழ்வில் பயன்படுத்தவிருக்கும் செபமாலைகள், திரு உருவங்கள் பதித்த அணிகலன்கள் போன்ற பல்வேறு  புனிதப் பொருட்களை பிரேசில் சிறையில் உள்ள 50 ஆண் மற்றும் 30 பெண் கைதிகள் தயாரித்து வருகின்றனர்.
சிறையில் உள்ள கைதிகள் மீண்டும் வெளி உலகத்திற்குச் செல்லும்போது, அவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் இந்த முயற்சி அமையும் என்று, இத்திட்டத்தை முன்னின்று நடத்தும் தேசிய குடும்பநலக் கழகத்தின் உதவித் தலைவர், Paulo Fernando Melo கூறினார்.
இம்முயற்சியை பிரேசில் நாட்டில் உள்ள அனைத்து சிறைகளிலும் ஆரம்பிக்கும் திட்டங்கள் உள்ளன என்றும், இக்கைதிகள் திருப்பலி உடைகள் மற்றும் பல புனிதப் பொருட்கள் தயாரிக்கும் வகையில் அவர்களுக்குப் பயிற்சிகள் தரும் திட்டமும் உள்ளது என்றும் உதவித் தலைவர் Melo கூறினார்.

8. நோய் தடுப்பு மருந்துகளுடன் தகுந்த அளவு உணவைக் கொடுப்பதால் பல இலட்சம் குழந்தைகள் இறப்பதைத் தடுக்கமுடியும்

சன.31,2013. நோய் தடுப்பு மருந்துகளுடன் (Antibiotics) தகுந்த அளவு உணவைக் கொடுப்பதால் பல இலட்சம் குழந்தைகள் இறப்பதைத் தடுக்கமுடியும் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.
உணவு பற்றாக் குறையால் ஒவ்வோர் ஆண்டும் 2 கோடி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்; இவர்களில் பத்து இலட்சம் குழந்தைகள் இறக்கின்றனர்.
இந்த மரணங்களையும், உணவு பற்றாக் குறையால் வளர்ச்சி குன்றிய குழந்தைகளையும் குறித்து ஆப்ரிக்காவின் மாலி நாட்டில், வாஷிங்க்டன் பல்கலைக் கழகம்,  குழந்தைகளுக்குத் நோய் தடுப்பு மருந்து மட்டும் அளிப்பதால் ஏற்படும் எதிர் மறை விளைவுகள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
2767 குழந்தைகள் மத்தியில் 5 முதல் 6 மாதங்கள் வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் The New England Journal of Medicine என்ற மருத்துவ இதழில் இப்புதனன்று வெளியாயின.
இந்த ஆய்வின் விவரங்களை, ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனமான WHO பயன்படுத்தவிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


ROBERT JOHN KENNEDY: Sand Art - the emerging art form...

ROBERT JOHN KENNEDY: Sand Art - the emerging art form...:

Sand Art - the emerging art form...

 

ROBERT JOHN KENNEDY: கின்னஸ் உலகசாதனை புத்தகம் உருவான வரலாறு

ROBERT JOHN KENNEDY: கின்னஸ் உலகசாதனை புத்தகம் உருவான வரலாறு: கின்னஸ் உலகசாதனை புத்தகம் உருவான வரலாறு   1951ம் வருடம் ஒரு நாள் மாலைப்பொழுது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘கின்னஸ் வாட் சாலைஎன்ற அமைப்பி...

கின்னஸ் உலகசாதனை புத்தகம் உருவான வரலாறு

கின்னஸ் உலகசாதனை புத்தகம் உருவான வரலாறு
 
1951ம் வருடம் ஒரு நாள் மாலைப்பொழுது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘கின்னஸ் வாட் சாலைஎன்ற அமைப்பிற்கு நிர்வாக இயக்குநராக இருந்தவர் ‘சர்க்யூ பீவர்’. இவர் வேட்டையாடுவதற்காக ஒரு நதிக் கரையோரம் சென்று கொண்டிருந்தார்
அப்போது ஆகாயத்தில் ஒரு நீண்ட கோடு போல ஏராளமான பறவைகள் பறந்து சென்று கொண்டிருந்தன. அவர், உடனே அவற்றை சுட எண்ணி, குனிந்து தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்தார்.

எடுத்து நிமிர்ந்தவர் அந்தப் பறவைக்கூட்டம் கண்ணுக்கே தெரியாத தொலைவுக்குச் சென்று விட்டதை அறிந்தார். வியப்பில் உறைந்து போனார். என்ன ஒரு வேகம்! ‘கோல்டன் பிளவர்’ என்ற பறவையினம் அவை.

அப்போதுதான் அவருக்கு ஒரு சிந்தனை பளிச்சிட்டது. ஒருவேளை உலகிலேயே மிகவும் வேகமாகப் பறக்கும் பறவையினம் இவையாகத்தான் இருக்குமோ என்று எண்ணினார். பலரிடம் பல புத்தகங்களிலும் விடை தேடினார்.

பலன்தான் இல்லை. இது குறித்து நாமே ஒரு புத்தகம் வெளியிட்டால் என்ன என்று யோசித்தார். அவர் உடனே லண்டன் சென்றார். அங்கு அரசாங்கத்திற்காக புள்ளி விவரங்கள் சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டர், ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டைச் சகோதரர்களைச் சந்தித்தார்.

தனது புதிய புத்தக யோசனையை தெரிவித்தார். அவர்களும் ஒத்துழைப்புதர முன்வந்தனர். மூவரின் உழைப்பில் பிறந்ததுதான் கின்னஸ் புத்தகம். முதல் கின்னஸ் புத்தகம் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் 198 பக்கங்களுடன் அவர்களால் வெளியிடப்பட்டது.

உலகிலேயே மிகவும் பெரியது. மிகவும் சிறியது ஆகிய விவரங்கள் இதில் அடங்கியிருந்தன. மேலும் அவ்வாண்டு வெளியான புத்தகங்களில் அமோக விற்பனையான புத்தகம் என்ற பெருமையும் கின்னஸ் புத்தகத்திற்குக் கிடைத்தது.

அன்று தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது சாதனை புரிந்தவர்களைப் பற்றிய செய்திகளோடு புத்தகம் வெளிவந்தது. தொடர்ந்து ஆண்டுதோறும் வெளிவரும் கின்னஸ் புத்தகம் இடையில் 1957, 1959 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் வெளிவரவில்லை.

இதற்கான காரணம் தெரியவில்லை. தனிப்பட்ட நபரின் எந்த ஒரு புதிய சாதனையையும் கின்னஸ் புத்தகத்திற்கு அனுப்பலாம். இதற்கான தகுந்த ஆதாரங்களைக் காட்டவேண்டும் எப்படி? என பார்ப்போம்.

சாதனையாளரின் சாதனை பற்றிய பத்திரிகை செய்திகள், பார்வையாளர்களாக இருந்த பொறுப்பானவர்களின் கையெழுத்துத் தொகுப்பு, இவை உண்மைதான் என்று ஒரு பொறுப்பான நிறுவனத்தின் தலைவர் வழங்கும் உறுதிமொழி.

இவ்வளவும் அனுப்ப வேண்டும். புதிய சாதனை முந்தைய சாதனையை முறியடிப்பதற்காக இருந்தால் அந்தச் செய்தியும் சாதனையாளர் பற்றிய தகவலும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும்.

கின்னஸ் புத்தகத்தில் சாதனை நிகழ்ச்சிகளை வெளியிடுவார்களே தவிர, யாரையும் சாதனைபுரியத் தூண்டமாட்டார்கள். கின்னஸ் புத்தகம் பற்றிக் கூட கின்னஸ் புத்தகத்தில் 1974ல் இடம் பெற்றது. அது உலகிலேயே அதிகமாக விற்பனையான புத்தகம் என்ற வரிசையில்தான்.

முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த புத்தகம் விரைவிலேயே 35 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

ROBERT JOHN KENNEDY: நீரிழிவு நோய் -2 சிகிச்சைக்கான மருந்து கனடாவில் தம...

ROBERT JOHN KENNEDY: நீரிழிவு நோய் -2 சிகிச்சைக்கான மருந்து கனடாவில் தம...: நீரிழிவு நோய் -2 சிகிச்சைக்கான மருந்து கனடாவில் தமிழர் தலைமையில் கண்டுபிடிப்பு உலகில் உள்ள நீரிழிவு நோயாளர்களிடையே மிகவும் துண்பத்தை...

நீரிழிவு நோய் -2 சிகிச்சைக்கான மருந்து கனடாவில் தமிழர் தலைமையில் கண்டுபிடிப்பு

நீரிழிவு நோய் -2 சிகிச்சைக்கான மருந்து கனடாவில் தமிழர் தலைமையில் கண்டுபிடிப்பு

உலகில் உள்ள நீரிழிவு நோயாளர்களிடையே மிகவும் துண்பத்தைத் தரும் ஒரு வகையாக இருந்த இரண்டாம் நிலை நீரிழிற்விற்கான மருத்துவம் இனி முடி திருத்துவதைப் போல பத்தோடு பதிnhன்றான விடயமாக ஒரு கண்டுபிடிப்பு உதவியுள்ளது.

மௌன்ட் சினாய் வைத்தியசாலையின் ஆராய்ச்சிப் பிரிவின் வைத்தியர் ரவி ரட்னாகரன் இதற்கான சிகிச்சையை மிகவும் இலகுவாக்கி ஒரு இன்சுலின் மூலம் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்கிறார். இந்த சிகிச்சை முறைமை அடுத்த மாதத்திலிருந்து கற்கை முறையாக அறிமுகப்படுத்தப்படும்.

இந்த இன்சுலினின் மூலம் நோயாளி ஒரு ஊசியோடே ஒரு மாத காலத்திற்கு தாக்குப்பிடிக்கக் கூடியதாக அவரது கலங்கள் தேவையான சுரப்புக்களை மேற்கொண்டு நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் என்றும் நாளாந்தம் இதற்கான இன்சுலினை ஊசியூடாகப் பெற்றுவந்தவர்கள் இனி மாதம் ஒரு தடவை ஏதோ முடி திருத்துவது போல இந்த ஊசியை சர்வ சாதாரணமாக உட்செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நீரிழிவு நோய்-2 பெரியவர்களை மாத்திரமல்ல பல சிறியவர்களைக்கூட தனது பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
நீரிழிவு நோய் -2 சிகிச்சைக்கான மருந்து கனடாவில் தமிழர் தலைமையில் கண்டுபிடிப்பு

உலகில் உள்ள நீரிழிவு நோயாளர்களிடையே மிகவும் துண்பத்தைத் தரும் ஒரு வகையாக இருந்த இரண்டாம் நிலை நீரிழிற்விற்கான மருத்துவம் இனி முடி திருத்துவதைப் போல பத்தோடு பதிnhன்றான விடயமாக ஒரு கண்டுபிடிப்பு உதவியுள்ளது.

மௌன்ட் சினாய் வைத்தியசாலையின் ஆராய்ச்சிப் பிரிவின் வைத்தியர் ரவி ரட்னாகரன் இதற்கான சிகிச்சையை மிகவும் இலகுவாக்கி ஒரு இன்சுலின் மூலம் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்கிறார். இந்த சிகிச்சை முறைமை அடுத்த மாதத்திலிருந்து கற்கை முறையாக அறிமுகப்படுத்தப்படும்.

இந்த இன்சுலினின் மூலம் நோயாளி ஒரு ஊசியோடே ஒரு மாத காலத்திற்கு தாக்குப்பிடிக்கக் கூடியதாக அவரது கலங்கள் தேவையான சுரப்புக்களை மேற்கொண்டு நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் என்றும் நாளாந்தம் இதற்கான இன்சுலினை ஊசியூடாகப் பெற்றுவந்தவர்கள் இனி மாதம் ஒரு தடவை ஏதோ முடி திருத்துவது போல இந்த ஊசியை சர்வ சாதாரணமாக உட்செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நீரிழிவு நோய்-2 பெரியவர்களை மாத்திரமல்ல பல சிறியவர்களைக்கூட தனது பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

ROBERT JOHN KENNEDY: ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் முட்டை தரும் பலன்

ROBERT JOHN KENNEDY: ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் முட்டை தரும் பலன்: ஆரோக்கியத்துக்கு ம் அழகுக்கும் முட்டை தரும்  பலன்   ஒரு முட்டையில் 6 கிராம் புரதமும் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களும் இருக்கிறது. ...

ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் முட்டை தரும் பலன்

ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் முட்டை தரும்  பலன்
 
ஒரு முட்டையில் 6 கிராம் புரதமும் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களும் இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் டி உள்ளது.

முட்டையில் சரியான விகிதத்தில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஒரு முட்டையில் 5 கிராம் கொழுப்பு உள்ளது, அதில் 1.5 கிராம் நிறைவுற்ற கொழுப்பு (sணீtuக்ஷீணீtமீபீ யீணீt) உள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் 300 மைக்ரோ கிராம் கொலைன் சத்து (சிலீஷீறீவீஸீமீ) உள்ளது. இது மூளை, நரம்பு மண்டலம் மற்றும் இதயக் குழாய் செயல்பாடுகளுக்கு மிகவும் நல்லது.

முட்டையை தொடர்ந்து சாப்பிட்டு வர, மார்பக புற்று நோய் வருவதை தடுக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

முட்டையைப் பற்றி பல தவறான புரிதல்கள் இருந்து வருகின்றன. முட்டை சாப்பிடுவதற்கும் இதய நோய்களுக்கும் எவ்வித நேரடித் தொடர்பும் இல்லை. தினமும் அளவாக முட்டையை உணவில் சேர்த்துக்கொண்டால், ஸ்ட்ரோக், ரத்த உறைவு போன்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, அழகுக்கும் முட்டை நல்ல பலன் தரும். முட்டையில் சல்பர் சத்து, தாது உப்பு மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், தலைமுடி மற்றும் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்

ROBERT JOHN KENNEDY: Leaked UN report indicates Sri Lanka war crimes

ROBERT JOHN KENNEDY: Leaked UN report indicates Sri Lanka war crimes

ROBERT JOHN KENNEDY: Sri Lanka Tamil killings 'ordered from the top'-Ch...

ROBERT JOHN KENNEDY: Sri Lanka Tamil killings 'ordered from the top'-Ch...

Leaked UN report indicates Sri Lanka war crimes

Sri Lanka Tamil killings 'ordered from the top'-Channel 4 News

தேவநிந்தனை சட்டத்தின் கீழ் 18 மாதங்கள் பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த Barkat Masih விடுதலை

தேவநிந்தனை சட்டத்தின் கீழ் 18 மாதங்கள் பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த Barkat Masih விடுதலை

சன.30,2013. பாகிஸ்தானில், தேவநிந்தனை சட்டத்தின் கீழ் தவறாக கைது செய்யப்பட்ட Rimsha Masih என்ற சிறுமி அண்மையில் விடுவிக்கப்பட்டதையடுத்து, இதே சட்டத்தின்கீழ் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த Barkat Masih என்பவரும் இச்செவ்வாயன்று விடுவிக்கப்பட்டார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 56 வயதான Barkat Masih, ஓர் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், கிறிஸ்தவ மறைக்கு மாறியவர். இவர் 2011ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தேவநிந்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

2009ம் ஆண்டு ஜூன் மாதம் தேவநிந்தனை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆசியா பிபி என்ற 46 வயது பெண்ணும், Rimsha Masih, Barkat Masih ஆகிய இருவரின் விடுதலையை அடுத்து விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் கிறிஸ்தவ சமுதாயம் எதிர்பார்க்கிறது.

பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரை அச்சத்தில் வாழவைக்கும் தேவநிந்தனை சட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று பன்னாட்டு அரசுகளிடமிருந்து பாகிஸ்தான் அரசுக்குத் தொடர்ந்து விண்ணப்பங்கள் எழுந்து வருகின்றன.

Wednesday, 30 January 2013

ROBERT JOHN KENNEDY: மத கடவுளர் படங்கள் சிலைகளை அகற்றவேண்டும்

ROBERT JOHN KENNEDY: மத கடவுளர் படங்கள் சிலைகளை அகற்றவேண்டும்: மத கடவுளர் படங்கள் சிலைகளை அகற்றவேண்டும்   கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் இருக்கும் அனைத்து மத கடவுளர் படங்கள் சிலைகளை தமி...

மத கடவுளர் படங்கள் சிலைகளை அகற்றவேண்டும்

மத கடவுளர் படங்கள் சிலைகளை அகற்றவேண்டும்
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் இருக்கும் அனைத்து மத கடவுளர் படங்கள் சிலைகளை தமிழக அரசின் ஆணைப்படியும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியும் உடனடியாக அகற்றவேண்டும், குருந்தன்கோடு பூங்காவை இடித்து கட்டிய கோவிலின் அலங்கார வளைவினை அகற்றி ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பூங்கா நிலத்தை மீட்க வேண்டும், அதுபோல தேரூரில் இருக்கும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தின் பின்புறம் கட்டிய கோவிலையும், கோவில் மண்டபத்தினையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் இருக்கும் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ. வெற்றிவேந்தன், வாழ்வுரிமை மக்கள் இயக்கத் தலைவர் வழக்குரைஞர் ஜோ. தமிழ்ச்செல்வன் தி.க. மாவட்ட அமைப்பாளர் ஞா. பிரான்சிஸ், ம. தயாளன், உ. சிவதாணு, எஸ். கே. அகமது, த. சுரேஷ், அய். மணிகண்டன், செ. ஆனந்த், நகர ச. நல்லபெருமாள், கவிஞர் எச். செய்க்முகமது, ச. ச. கருணாநிதி, செ. இரத்தினசாமி ஆகியோர் சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் ச.நாகராஜனைச் சந்தித்து மாவட்ட கழகம் சார்பில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ROBERT JOHN KENNEDY: கறுப்பு அரிசி

ROBERT JOHN KENNEDY: கறுப்பு அரிசி: கறுப்பு அரிசி   நம் ஊர்களில் விளையும் கவுனி அரிசிதான் கறுப்பு அரிசியாகும். ' கவுனி ’ என்றால் ' கோட்டை வாசல் ’ என்று பொருள். கறுப்பு அரிச...

கறுப்பு அரிசி

கறுப்பு அரிசி
 நம் ஊர்களில் விளையும் கவுனி அரிசிதான் கறுப்பு அரிசியாகும். 'கவுனிஎன்றால் 'கோட்டை வாசல்என்று பொருள். கறுப்பு அரிசியை 'அரசர்களின் அரிசி' என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. சீனாவில், அரசர்களும், அரசிகளும் மட்டுமே இந்த அரிசியைச் சாப்பிட வேண்டும் என்று ஒரு சட்டமே இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சீனாவில், கையளவு அரிசியைத் திருடிச்சென்ற அரண்மனை ஊழியர் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டது. யாருக்கும் தெரியாமல் இந்த அரிசியைச் சாப்பிட்ட இன்னொருவரின் தலையும் துண்டிக்கப்பட்டது என்கிற செய்திகளும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளன. இந்த அரிசிக்கு ஆண்மையை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு மற்றும் இவ்வரிசி, முதுமையைத் தவிர்க்கவும், ஆயுளை நீட்டிக்கவும் உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. 'ஆன்த்தோசயனின்'(Anthocyanin) என்கிற வேதிப்பொருள், இந்த அரிசியின் கறுப்பு நிறத்துக்குக் காரணம். இது ஓர் அற்புதமான Antioxidant. இதய நோய்கள் முதல் சிறுநீரக நோய்வரை, மூளைப் பாதிப்புகள், புற்றுநோய் வகைகள் எல்லாமே பிராணவாயுவின் சிதைந்த பொருட்களால் (oxygen free radicals) விளையும் கேடுகள் என்று கருதப்படுகின்றன. இதற்கு எதிராகச் செயல்படும் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள், தற்போது மருத்துவ உலகில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. கறுப்பு அரிசியின் 'ஆன்த்தோசயனின்' இதற்குப் பெரிதும் உதவுகிறது.
 

ROBERT JOHN KENNEDY: Catholic news in Tamil - 30/01/13

ROBERT JOHN KENNEDY: Catholic news in Tamil - 30/01/13: 1. நம்பிக்கை இழந்து நாடு விட்டு நாடு செல்லும் கட்டாயத்திற்கு இன்று மக்கள் உட்படுத்தப்படுகின்றனர் - கர்தினால் Veglio 2. எருசலேம் நகரில...

Catholic news in Tamil - 30/01/13


1. நம்பிக்கை இழந்து நாடு விட்டு நாடு செல்லும் கட்டாயத்திற்கு இன்று மக்கள் உட்படுத்தப்படுகின்றனர் - கர்தினால் Veglio

2. எருசலேம் நகரில் வத்திக்கானுக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் நல்லுறவு வளர்க்கும் கூட்டம்

3. பிலிப்பின்ஸ் அரசு வாரிசு அரசியலை உடனடியாக நிறுத்தவேண்டும் - பிலிப்பின்ஸ் ஆயர்கள் பேரவை

4. மகாராஷ்டிரா மாநிலக் கிறிஸ்தவர்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்கவேண்டும் - மதசார்பற்ற கத்தோலிக்க அமைப்பு வேண்டுகோள்

5. தேவநிந்தனை சட்டத்தின் கீழ் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த Barkat Masih விடுதலை

6. நைஜீரியாவில் Boko Haram குழுவின் ஒரு பகுதியினர் ஆயுதங்களைக் களைய முன்வந்துள்ளனர்

7. பறவைக் காய்ச்சல் மீண்டும் பரவும் ஆபத்து உள்ளது - FAO எச்சரிக்கை

8. இந்திய வீட்டுத்திட்டத்தில் தமிழர்களுக்குப் பாரபட்சம்

------------------------------------------------------------------------------------------------------

1. நம்பிக்கை இழந்து நாடு விட்டு நாடு செல்லும் கட்டாயத்திற்கு இன்று மக்கள் உட்படுத்தப்படுகின்றனர் - கர்தினால் Veglio

சன.30,2013. உலகமயமாக்கல் என்ற எதார்த்தத்தில் வளர்ந்துவரும் இவ்வுலகில், புலம்பெயர்தல் என்பது நாளுக்கு நாள் சவால்கள் நிறைந்த ஒரு போக்காக மாறிவருகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
உரோம் நகரின் Sant'Egidio தலைமையகத்தில், ருமேனிய அரசின் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் இச்செவ்வாய் மாலை, புலம்பெயர்ந்தோர் மற்றும் பயணம் செய்வோர் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Veglio உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
முன்னொரு காலத்தில், நம்பிக்கையை வளர்ப்பதற்கு நாடுவிட்டு நாடு செல்லும் திருப்பயணங்களை மக்கள் மேற்கொண்ட நிலை மாறி, நம்பிக்கை இழந்து நாடு விட்டு நாடு செல்லும் கட்டாயத்திற்கு இன்று மக்கள் உட்படுத்தப்படுகின்றனர் என்பதை கர்தினால் Veglio வருத்தத்துடன் நினைவு கூர்ந்தார்.
நடைபெற்றுவரும் நம்பிக்கை ஆண்டில் 'புலம்பெயர்தலும் நம்பிக்கையில் இணைதலும்' என்ற தலைப்பில் ருமேனிய அரசு நடத்தும் இக்கூட்டம் மகிழ்வைத் தருவதாகவும் கர்தினால் Veglio எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில், புலம்பெயர்ந்தோர் மற்றும் பயணம் செய்வோர் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Veglio அவர்களுக்கு 'ருமேனியாவின் விண்மீன்' என்ற விருது வழங்கப்பட்டது.


2. எருசலேம் நகரில் வத்திக்கானுக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் நல்லுறவு வளர்க்கும் கூட்டம்

சன.30,2013. திருப்பீடத்திற்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே உறவுகளை வளர்க்கும் ஒரு முயற்சியாக, இவ்விரு தரப்பின் பிரதிநிதிகள் இச்செவ்வாயன்று எருசலேம் நகரில் சந்தித்தனர்.
திருப்பீட நாடுகளுடனான உறவுகளின் நேரடிப் பொதுச்செயலர் பேரருள்திரு Ettore Balestrero தலைமையில் சென்றிருந்த வத்திக்கான் பிரதிநிதிகளுக்கும், இஸ்ரேல் அரசின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் Daniel Ayalon தலைமையில் வந்திருந்த இஸ்ரேல் அரசின் பிரதிநிதிகளுக்கும் இடையே இக்கூட்டம் நடைபெற்றது.
வத்திக்கானுக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவு இன்னும் வலுப்பெறுவதற்கான வழிமுறைகள் இக்கூட்டத்தில் பேசப்பட்டன.
இவ்விரு தரப்பினருக்கும் இடையே இவ்வாண்டு ஜூன் மாதம் வத்திக்கானில் அடுத்த கூட்டம் நடைபெறும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


3. பிலிப்பின்ஸ் அரசு வாரிசு அரசியலை உடனடியாக நிறுத்தவேண்டும் - பிலிப்பின்ஸ் ஆயர்கள் பேரவை

சன.30,2013. வாரிசு அரசியலையும், வளர்ந்துவரும் ஊழலையும் பிலிப்பின்ஸ் அரசு உடனடியாக நிறுத்தவேண்டும் என்று பிலிப்பின்ஸ் ஆயர்கள் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக பிலிப்பின்ஸ் நாட்டின் மணிலா நகரில் பிலிப்பின்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் ஆண்டு நிறைவு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் இறுதியில், மேய்ப்புப்பணி மடல் ஒன்றை, ஆயர்கள் சார்பில் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Jose Palma இச்செவ்வாயன்று வெளியிட்டார்.
மக்களின் கவலைகளை வெளியிடவும், அவர்களோடு இணைந்து நன்னெறியை உறுதிப்படுத்தும் போராட்டத்தில் துணை நிற்கவும் ஆயர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று பேராயர் Palma செய்தியாளர்களிடம் கூறினார்.
வாரிசு அரசியலைத் தடை செய்யும் வகையில் சட்டமொன்றை உருவாக்க, பிலிப்பின்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காட்டும் தயக்கம் வருத்தத்தைத் தருகிறது என்றும், இவ்வகை சட்டம் இயற்றப்படுவதற்கு திருஅவை முழுமையான ஆதரவு அளிக்கும் என்றும் பேராயர் Palma கூறினார்.
மக்கள் நலனில் அக்கறை கொண்டு, ஊழலற்ற வகையில் அரசாளும் தகுதி பெற்றோரையே நடைபெறவிருக்கும் தேர்தல்களில் மக்கள் தெரிவு செய்யவேண்டும் என்றும் பிலிப்பின்ஸ் ஆயர்களின் மேய்ப்புப்பணி மடல் அழைப்பு விடுக்கிறது.


4. மகாராஷ்டிரா மாநிலக் கிறிஸ்தவர்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்கவேண்டும் - மதசார்பற்ற கத்தோலிக்க அமைப்பு வேண்டுகோள்

சன.30,2013. மகாராஷ்டிரா மாநிலத்தின் Sindhudurg பகுதியில் இந்து அடிப்படைவாத குழுக்களின் வன்முறைகள் பரவி வருவதால், அங்கு வாழும் கிறிஸ்தவர்களுக்கு மாநில அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று மதசார்பற்ற கத்தோலிக்க அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இம்மாதத்தில் Sawantwadi என்ற இடத்தில் கிறிஸ்தவ வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 600க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் மீது இந்து அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்தி, வழிபாட்டை நிறுத்தினர்.
இந்நிகழ்வையடுத்து, மதசார்பற்ற கத்தோலிக்க அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஜோசப் டயஸ், மாநில முதல்வர் Prithviraj Chavanக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நடைபெற்ற வன்முறையைக் குறித்து அரசு தீர ஆய்வு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கிறிஸ்தவர்களுக்கு எதிராக, மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்றுள்ள பல வன்முறைகளில் காவல்துறையினர் செயலற்று நின்றதையும், ஒரு சில இடங்களில் வன்முறையாளர்களுக்கு உதவிகள் செய்ததையும் இம்மடல் சுட்டிக்காட்டியுள்ளது.


5. தேவநிந்தனை சட்டத்தின் கீழ் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த Barkat Masih விடுதலை

சன.30,2013. பாகிஸ்தானில், தேவநிந்தனை சட்டத்தின் கீழ் தவறாக கைது செய்யப்பட்ட Rimsha Masih என்ற சிறுமி அண்மையில் விடுவிக்கப்பட்டதையடுத்து, இதே சட்டத்தின்கீழ் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த Barkat Masih என்பவரும் இச்செவ்வாயன்று விடுவிக்கப்பட்டார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 56 வயதான Barkat Masih, ஓர் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், கிறிஸ்தவ மறைக்கு மாறியவர். இவர் 2011ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தேவநிந்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
2009ம் ஆண்டு ஜூன் மாதம் தேவநிந்தனை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆசியா பிபி என்ற 46 வயது பெண்ணும், Rimsha Masih, Barkat Masih ஆகிய இருவரின் விடுதலையை அடுத்து விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் கிறிஸ்தவ சமுதாயம் எதிர்பார்க்கிறது.
பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரை அச்சத்தில் வாழவைக்கும் தேவநிந்தனை சட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று பன்னாட்டு அரசுகளிடமிருந்து பாகிஸ்தான் அரசுக்குத் தொடர்ந்து விண்ணப்பங்கள் எழுந்து வருகின்றன.


6. நைஜீரியாவில் Boko Haram குழுவின் ஒரு பகுதியினர் ஆயுதங்களைக் களைய முன்வந்துள்ளனர்

சன.30,2013. புனிதப் போர் என்ற பெயரில் ஆப்ரிக்காவின் நைஜீரியாவில், வன்முறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் Boko Haram என்ற குழுவினரின் ஒரு பகுதியினர் ஆயுதங்களைக் களைய முன்வந்துள்ளதாக அந்நாட்டு செய்தித் தாள் ஒன்று கூறியுள்ளது.
Borno என்ற பகுதியில் உள்ள Boko Haram குழுவினரின் தலைவர் Sheikh Abu Mohammad இம்முடிவை இத்திங்களன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
பல கிறிஸ்தவ கோவில்களையும், நடுநிலையான இஸ்லாமிய அமைப்புக்களையும் தாக்கி வந்த Boko Haram, தங்கள் குழுவைச் சேர்ந்த கைதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி அரசு விடுவிக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளது.
தங்கள் நடவடிக்கைகளால், கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி, இஸ்லாமியப் பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே தங்கள் முடிவுக்குக் காரணம் என்று இக்குழ்வின் தலைவர் Abu Mohammad எடுத்துரைத்தார்.


7. பறவைக் காய்ச்சல் மீண்டும் பரவும் ஆபத்து உள்ளது - FAO எச்சரிக்கை

சன.30,2013. தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடில், 2006ம் ஆண்டு உலகின் பல பாகங்களிலும் பரவிய பறவைக் காய்ச்சல் மீண்டும் பரவும் ஆபத்து உள்ளது என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு  (FAO) கூறியுள்ளது.
உலகில் தொடர்ந்து வரும் பொருளாதாரச் சரிவின் ஒரு விளைவாக, H5N1 எனப்படும் பறவைக் காய்ச்சல் கிருமிகள் குறித்த ஆய்வுகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன என்று கூறும் FAO அமைப்பின் தலைவர் Juan Lubroth, அரசுகள் விரைவில் விழித்துக் கொள்வது அவசியம் என்றும் கூறினார்.
2003ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு முடிய இந்நோய் தொடர்ந்து நீடித்து வந்தாலும், 2006ம் ஆண்டு இந்நோயின் தாக்கம் தீவிரமடைந்து, 63 நாடுகள் பாதிக்கப்பட்டன என்று FAO வின் இவ்வறிக்கை கூறுகிறது.
தற்போது காங்கோ குடியரசு நாட்டில் பெருமளவு பரவிவரும் இந்நோயின் தாக்கம் நிறுத்தப்படவில்லை எனில், தென் ஆப்ரிக்காவும், விரைவில், உலகமும் இந்நோயின் தாக்கத்தை உணரக்கூடிய ஆபத்து உள்ளது என்று FAO தலைவர் Lubroth தெரிவித்தார்.


8. இந்திய வீட்டுத்திட்டத்தில் தமிழர்களுக்குப் பாரபட்சம்

சன.30,2013. இந்திய வீட்டுத் திட்டத்தில் தமிழ்க் கிராமங்களுக்குப் பாரபட்சம் காட்டப்படுவதைக் கண்டித்து வவுனியாவில் இப்புதனன்று கண்டனப் பேரணியொன்று நடத்தப்பட்டது. மாவட்ட மீள்குடியமர்ந்தோர் நலன் பேணும் அமைப்பு இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.
வவுனியா அரசு செயலகத்தை அடைந்த பேரணியின் முக்கியப் பிரதிநிதிகள் அரசுத்தலைவருக்கு எழுதப்பட்ட விண்ணப்பம் ஒன்றை வவுனியா ஆளுனரிடம் கையளித்தனர்.
இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டு வரும் 50,000 வீட்டுத் திட்டத்தால்  பயனடைவோரைத் தெரிவு செய்வதில் அமைச்சர் ரிசாட் பதியுதீனும் ஏனைய அரசு அதிகாரிகளும் பாரபட்சமாகச் செயற்பட்டு வருகின்றனர் என்று அந்த விண்ணப்பத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.
விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட ஆளுனர், தமிழர் தரப்பினருடைய குறைகள், கோரிக்கைகள் என்பவற்றை விரிவாகக் கேட்டறிந்ததுடன், அது குறித்து விசாரணைகள் நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக மாவட்ட மீள்குடியமர்ந்தோர் நலன் பேணும் அமைப்பின் தலைவர் பொன்னையா தனஞ்சயநாதன் தெரிவித்தார்.

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...