"காஸ் லீக்' என பயப்பட வேண்டாம்!
சமையல் சிலிண்டரின், "காஸ்' கசிவை கண்டு பிடிக்கும் கருவியை தயாரித்துள்ள, தேன்மொழி: உலகம், மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆண்களுக்கு இணையாக பெண்களும், குடும்ப தேவைகளை நிறைவேற்ற, வேலைக்கு செல்ல வேண்டிஉள்ளது. அவசர அவசரமாக, சமையலை முடித்து, வேலைக்கு செல்கின்றனர். வெளியே சென்றதும், சிலிண்டரை மூடினோமா என்ற, பயம் கலந்த சந்தேகம் வருகிறது. சிலிண்டர்களை மூடினாலும், "டியூப்' வழியாக, காஸ் வெளியாகி, விபத்து ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதால், இந்த பயம். தேவையற்ற விபத்தையும், மன உளைச்சலையும் தவிர்ப்பதற்கு, ஆய்வு செய்தேன். வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மாணவி என்பதால், என்னுடன் இரு மாணவியர், ஒரு பேராசிரியர் இணைந்து, ஒரு குழுவாக ஆய்வுகளை மேற்கொண்டோம். ஆய்வின் பயனாக, "ஸ்மார்ட் காஸ் லீக் டிடெக்டர்' கருவி கண்டுபிடித்தோம். சிலிண்டர் இருக்கும் சமையலறை பகுதியிலிருந்து, ஒரு மீட்டருக்குள், இந்த டிடெக்டரை பொருத்த வேண்டும். சிலிண்டரில் காஸ் கசிவு, எந்தக் காரணத்தால் ஏற்பட்டாலும், "சென்சார்' உடனடியாக உணர்ந்து விடும். உணர்ந்த ஆறு நொடிகளில், அலாரம் ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும். சில நொடிகளில், கருவியில் உள்ள, "சிம்' கார்டில், தானாக மூன்று எண்களுக்கு எச்சரிக்கை, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் தொழில் நுட்ப வசதியுள்ளது. வீட்டில் ஆட்கள் இருந்தாலும் இல்லா விட்டாலும், தொடர்ந்து காஸ் கசிவை கண்காணித்து, மன உளைச்சலை தடுக்கிறது. எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்கு மூன்று எண்களை, நாமே தேர்ந்தெடுக்கலாம். நம்முடைய எண், குடும்பத்தினர், நண்பர், பக்கத்து வீட்டார், வீட்டின் உரிமையாளர், தீயணைப்புத் துறை என, தேவையானவர்களின் தொலைபேசி எண்களை, நாமே கருவியில் பதிவு செய்ய முடியும். இக்கருவியின் விலை, 200 ரூபாயிலிருந்து துவங்குகிறது.
No comments:
Post a Comment