Monday 28 January 2013

பராசக்தி திரைப்படம் வயது 60 !

பராசக்தி திரைப்படம் வயது 60 ! 
 

‘’ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பொப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ!’’

ஒவ்வொரு வார்த்தையாக திரையில் ஒலிக்க.. ஒலிக்க.. தமிழ்நாடே கையை தூக்கி இரண்டு இளைஞர்களிடம் சரண்டர் ஆனது. ஒவ்வொரு வசனத்தையும் திருக்குறளைப்போல மனப்பாடம் செய்து ஒப்பித்தது. தமிழகம் முழுக்க மிகப்பெரிய அதிர்வலைகளை அந்த திரைப்படம் உருவாக்கியது. அந்த வசனங்கள் அறுபது ஆண்டுகளுக்கு பின்னும் தமிழகமெங்கும் அன்றாடம் எங்காவது நினைவு கூறப்படுகிறது. பராசக்தி படத்துக்கு இந்த ஆண்டோடு அறுபது வயதாகிவிட்டது.

ஒரு புதிய அலையை, புதிய சிந்தனையை, புதிய போக்கினை தமிழ்சினிமாவுக்கு கொடுத்த திரைப்படம் பராசக்தி. அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் நம் மக்களின் நம்பிக்கைகளை விமர்சித்து படமெடுப்பதோடு அதை வெற்றிபெற செய்வதெல்லாம் அவ்வளவு சுலபமல்ல. அதுவும் சாதாரண வெற்றியல்ல..

பராசக்தி திரைப்படம் உருவான கதை ‘’என் தங்கை’’ என்கிற நாடகத்திலிருந்து தொடங்குகிறது. திருச்சி டி.எஸ். நடராஜன் என்பவர் எழுதிய இந்த நாடகம் ஐம்பதுகளின் துவக்கத்தில் பெருமளவில் ரசிகர்களை ஈர்த்த ஒன்றாக இருந்தது. பார்வையற்ற தங்கைக்காக தன் காதலை தியாகம் செய்யும் அண்ணனின் கதைதான் என்தங்கை. அந்த நாடகத்தில் பாசமிகு அண்ணனாக நடித்தவர் அப்போது சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த சாதாரண (சிவாஜி) கணேசன்.

அந்த நாடகத்தை கோவை சென்ட்ரல் ஸ்டுடீயோவை சேர்ந்த ஜூபிடர் சோமு பார்க்கிறார். அவருக்கு பார்த்ததும் பிடித்துவிட ஏ.எஸ்.ஏ.சாமி என்கிற அக்காலத்து முன்னணி இயக்குனரிடம் கூறுகிறார். அவரும் நாடகத்தை பார்த்து இதை சினிமாவாக செய்யலாம் என்று சம்மதிக்கிறார்.

அந்த நேரத்தில் ஏ.எஸ்.ஏ.சாமி நிறைய படங்கள் இயக்கி வந்தார். அதனால் சுந்தர் ராவ் நட்கர்னி என்பவருக்கு ‘’என் தங்கை’’ படத்தினை தள்ளிவிட்டுவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார். ஆனால் நட்கர்னியோ முதலில் ஒப்புக்கொண்டு தன்னால் இதுபோல நவீனகதைகளை படமாக்குவதில் விருப்பமில்லை என்று மறுத்துவிடுகிறார். மீண்டும் என் தங்கை ஏ.எஸ்.ஏ.சாமிக்கே திரும்பிவருகிறது.

ஏ.எஸ்.ஏ.சாமி தமிழகமெங்கும் சூப்பர்ஹிட்டாக போய்க்கொண்டிருந்த பராசக்தி என்கிற நாடகத்தை பார்க்கிறார். அவரை அந்த நாடகம் பார்க்க தூண்டியவர் பி.ஏ.பெருமாள் என்கிற நேஷனல் பிக்சர்ஸின் அதிபர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்.

ஏ.எஸ்.ஏ.சாமிக்கு அப்போது ஒரு யோசனை தோன்றுகிறது பராசக்தி நாடகமும் அண்ணன்தங்கை பாசம் குறித்த கதைதான்.. அதையும் என்தங்கை நாடக கதையையும் சேர்த்து ஒன்றாக்கி ஒரு திரைக்கதை பண்ணினால் பிரமாதமாக வரும் என்று திட்டமிட்டார். ஆனால் என்தங்கை நாடகத்தை எழுதிய திருச்சி டி.எஸ்.நடராஜனோ அதற்கு சம்மதிக்கவில்லை. அதோடு அந்த நாடகத்தின் கதையை வேறொரு தயாரிப்பாளருக்கு விற்றும் விட்டார்!

முதலில் பின்னணி பாடகர் திருச்சி லோகநாதன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு சூட்டிங்கும் தொடங்கி.. பின் என்தங்கை கைவிடப்பட்டது. கடைசியில் சிவாஜி நடித்த என்தங்கை நாடகத்தில் நாயகனாக நடித்தவர் நம்ம புரட்சிதலைவர் எம்ஜிஆர்தான்!

மேலும் படிக்க .. புத்தம் புது பொலிவுடன் Visually Stunning http://cinemobita.com/

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...