Tuesday, 22 January 2013

மூக்குக் கண்ணாடி

மூக்குக்கண்ணாடி

கண்பார்வைக் குறைவுள்ளவர்கள் தெளிவாகப் பார்க்கவும், சுற்றுச்சூழல் தாக்கத்தினின்று கண்களைப் பாதுகாக்கவும், அழகுக்காகவும் மூக்குக்கண்ணாடி (spectacles) அணியப்படுகிறது. முதல் நூற்றாண்டிலேயே மூக்குக்கண்ணாடி பயன்படுத்தப் பட்டதற்கான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. பொருள்களைப் பெரிதாகப் பார்ப்பதற்கு லென்ஸ்(கண்ணாடிவில்லை)களை எகிப்தியர்கள் கி.மு.5ம் நூற்றாண்டிலேயே பயன்படுத்தியிருக்கிறார்கள். கி.பி 54 முதல் கி.பி.68 வரை உரோமையப் பேரரசை ஆட்சி செய்த நீரோவுக்கு ஆசிரியராக இருந்த செனெக்கா, சிறிய மற்றும் தெளிவற்ற பொருள்கள், தண்ணீரால் நிரம்பிய உருண்டை வடிவக் கண்ணாடி வழியாக,  பெரியதாகவும் மிகத் தெளிவாகவும் தெரிகின்றன என எழுதியுள்ளார். மேலும், நீரோ பேரரசர், உரோமையக் காட்சியரங்குகளில் நடைபெற்ற விளையாட்டுக்களைத் தெளிவாகப் பார்ப்பதற்காக, மரகதப் பச்சைக்கல்லை, லென்ஸாகப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. பொருள்களைப் பெரிதாகப் பார்ப்பதற்கு குவிலென்ஸ்கள் பயன்படுத்தப்பட்டது குறித்து 1021ம் ஆண்டில் வெளியான Alhazenனின் Book of Opticsல் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்நூல், 12ம் நூற்றாண்டில் அராபிய மொழியிலிருந்து இலத்தீனுக்கு மொழி பெயர்க்கப்பட்டது, இந்நூலே, 13ம் நூற்றாண்டில் இத்தாலியர்கள் மூக்குக்கண்ணாடிகளைக் கண்டுபிடிப்பதற்கு உதவியது. வாசிப்பதற்கு உதவும் மூக்குக்கண்ணாடி முதன் முதலில் இத்தாலியில் 1290ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...