Wednesday 30 January 2013

கறுப்பு அரிசி

கறுப்பு அரிசி
 நம் ஊர்களில் விளையும் கவுனி அரிசிதான் கறுப்பு அரிசியாகும். 'கவுனிஎன்றால் 'கோட்டை வாசல்என்று பொருள். கறுப்பு அரிசியை 'அரசர்களின் அரிசி' என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. சீனாவில், அரசர்களும், அரசிகளும் மட்டுமே இந்த அரிசியைச் சாப்பிட வேண்டும் என்று ஒரு சட்டமே இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சீனாவில், கையளவு அரிசியைத் திருடிச்சென்ற அரண்மனை ஊழியர் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டது. யாருக்கும் தெரியாமல் இந்த அரிசியைச் சாப்பிட்ட இன்னொருவரின் தலையும் துண்டிக்கப்பட்டது என்கிற செய்திகளும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளன. இந்த அரிசிக்கு ஆண்மையை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு மற்றும் இவ்வரிசி, முதுமையைத் தவிர்க்கவும், ஆயுளை நீட்டிக்கவும் உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. 'ஆன்த்தோசயனின்'(Anthocyanin) என்கிற வேதிப்பொருள், இந்த அரிசியின் கறுப்பு நிறத்துக்குக் காரணம். இது ஓர் அற்புதமான Antioxidant. இதய நோய்கள் முதல் சிறுநீரக நோய்வரை, மூளைப் பாதிப்புகள், புற்றுநோய் வகைகள் எல்லாமே பிராணவாயுவின் சிதைந்த பொருட்களால் (oxygen free radicals) விளையும் கேடுகள் என்று கருதப்படுகின்றன. இதற்கு எதிராகச் செயல்படும் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள், தற்போது மருத்துவ உலகில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. கறுப்பு அரிசியின் 'ஆன்த்தோசயனின்' இதற்குப் பெரிதும் உதவுகிறது.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...