Friday, 25 January 2013

பறவைகள்-விநோதங்கள்

பறவைகள்-விநோதங்கள்

வல்லூறு என்பது உருவில் சற்று சிறிய ஒரு கழுகு இனம். உலகிலேயே மிக அதிகமான வேகத்தில் பறப்பது இந்த வல்லூறு தான். வல்லூறுவின் உடல் நீளத்தைவிட அதன் இறக்கையின் நீளம் இருமடங்கு உள்ளது. கீழே பாய்ந்து இரையைக் கொல்லும்போது மணிக்கு 290 கி.மீ வேகத்தில் பறக்க வல்லது.
உலகத்தில் மிக உயரமாகப் பறக்கக்கூடிய பறவை Bar Headed Goose ஆகும் . இது 10,175 மீட்டர் (33,382 அடி) உயரம் வரை பறக்க வல்லது.
தென்முனைப் பெருங்கடலிலும் வட பசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் கடற் பறவையினமான ஆல்பட்ராஸ் பறவைகள், நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 640 கிலோ மீட்டர் தூரம் பறப்பதுண்டு. பறந்துகொண்டேதான் இவை உண்கின்றன, உறங்குகின்றன.
பறவை இனங்களில், மிக நீளமான அலகினைக் கொண்ட பறவை இனம் ”Australian Pelican” ஆகும். இதன் அலகின் நீளம் சராசரியாக 18.5 அங்குலங்கள் (47 சென்டிமீட்டர்கள்).
பறவை இனங்களில், அதிக எடையினைக் கொண்ட பறக்கும் பறவை இனம் "Kori Bustard" ஆகும். இதன் எடையினைக் குறிப்பிடுவதாயின் சராசரியாக ஓர் ஆறு வயது மனிதக் குழந்தையின் எடையினை ஒத்ததாகும்.
பறவை இனங்களில், அதிக தூரம் இடம்பெயரும் பறவை இனம் "Arctic Crane" ஆகும். இவை ஆண்டுதோறும் 32,000  முதல் 40,000 கிலோமீட்டர் தூரம் ஆர்ட்டிக் பகுதியிலிருந்து அண்டார்ட்டிக்கா பகுதிக்குப் பயணித்து மீண்டும் திரும்பி வருகின்றன.
பறவைகளில் மிகப்பெரிய முட்டையிடும் பறவை நெருப்புக்கோழி ஆகும். வீடுகளில் வளரும் பெட்டைக்கோழியானது பொதுவாக ஆண்டிற்கு 257 முட்டைகளை இடுகின்றதாம்.
மெக்சிக்கோ, பொலிவியா, சாம்பியா, சிம்பாப்வே, உகாண்டா, அல்பேனியா, எகிப்து, ஃபிஜி உட்பட உலகின் ஏறத்தாழ 17 நாடுகளின் கொடிகளில் பறவை உருவங்கள் உள்ளன.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...