Friday, 3 January 2014

அறுவைச்சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்ட இரட்டைக் குழந்தைகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்

அறுவைச்சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்ட இரட்டைக் குழந்தைகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்

Source: Tamil CNN
ஒட்டிப் பிறந்து சிக்கலான அறுவைச்சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்ட இரட்டைக் குழந்தைகள் சாதாரண குழந்தைகள் போன்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி அவர்களது பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
அமெரிக்க நியூயோர்க் நகரைச் சேர்ந்த கிரேக் மற்றும் ஷெல்லி தம்பதிக்கு பிறந்த இரட்டையர்களான அமெயிலாவும் அலிஸன் டக்கருமே இவ்வாறு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
இந்த குழந்தைகள் பிறக்கும் போது வயிறு மற்றும் மார்பு பகுதியில் இணைந்த நிலையில் பிரசவமாகின. தொடர்ந்து 8 மாத சிக்கலான செயற்கிரமத்தையடுத்து மேற்படி இரு குழந்தைகளும் சிக்கலான அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன. பிலடெல்பியா சிறுவர் மருத்துவமனையைச் சேர்ந்த 40 மருத்துவர்களைக் கொண்ட குழு இந்த அறுவைச் சிகிச்சையில் பங்கேற்றது. தற்போது உடல் நலம் தேறியுள்ள அக்குழந்தைகள் வழமையான குழந்தைகள் போன்று சுறுசுறுப்பாக காணப்படுகின்றன.

No comments:

Post a Comment