Friday, 20 December 2013

சர்வதேச விண்வெளி மையத்தில் கோளாறு – அவசர விண்வெளி பயணத்துக்கு நாசா உத்தரவு

சர்வதேச விண்வெளி மையத்தில் கோளாறு – அவசர விண்வெளி பயணத்துக்கு நாசா உத்தரவு

Source: Tamil CNN
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா, அவசர விண்வெளி பயணத்துக்கு உத்தரவிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் குளிரூட்டும் பகுதியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு கடந்த வாரம் கண்டறியப்பட்டது.
இதை உடனடியாக சரி செய்ய வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளதை அடுத்து நாசா அவசர விண்வெளி பயணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து நாசா தெரிவித்துள்ளதாவது – இது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் கோளாறு இல்லை என்றாலும் உடனடியாக சரி செய்யப்படவேண்டியது அவசியம் எனவே இந்த பணியில் இரண்டு விண்வெளி வீரர்கள் ஈடுபட உள்ளனர்.
அவர்கள் மூன்று முறை விண்வெளி பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. இதன்படி முதலாவது விண்வெளி பயணம் எதிர்வரும் சனிக்கிழமை தொடங்கும் என தெரிகிறது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...