Friday, 20 December 2013

நீரிழிவு நோய்க்கு இன்சுலின் மாத்திரைகளை கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்

நீரிழிவு நோய்க்கு இன்சுலின் மாத்திரைகளை கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்

Source: Tamil CNN
இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ சவால்களுள் ஒன்றாக நீரிழிவு நோய் இருந்து வருகின்றது. வரும் 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இது முன்னர் கணக்கிடப்பட்ட 87 மில்லியன் என்பதைவிட அதிகமாகும். டைப்-1 என்ற வகை நோய்க்குறைபாடு, உடலில் தேவையான இன்சுலின் சுரக்காதபோது ஏற்படும் ஒன்றாகும். உடலில் உள்ள இன்சுலின் ரத்தத்தில் உள்ள குளுகோசைக் கரைக்காவிடில் டைப்-2 எனப்படும் நோய்த்தாக்கம் தோன்றும். இது கடுமையான பிரச்சனைகளை உருவாக்கக்கூடியதாகும்.
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட இன்சுலின் மருந்து இந்த நோய் கண்ட ஏராளமான மக்களுக்கு உயிர் காக்கும் மருந்தாகப் பயன்பட்டு வருகின்றது. ஆயினும், இந்த மருந்தை தினமும் ஊசி மூலம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் வலி தராத மாத்திரை வடிவத்தில் இந்த மருந்தினைப் பெற மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முயன்று வந்தனர்.
1930 ஆம் ஆண்டிலிருந்து ஆய்வில் இருக்கும் இந்த முயற்சியில் தற்போது இந்திய விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ள விபரம் அமெரிக்கன் கெமிகல் சொசைட்டி இதழில் வெளிவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு நிரூபிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வருமேயானால் பாதுகாப்பற்ற ஊசிகளால் ஏற்படும் பின்விளைவுகளில் இருந்தும், தினமும் ஊசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் வலிகளிலிருந்தும் நீரிழிவு நோயாளிகள் நிவாரணம் பெறமுடியும்.
மாத்திரை வடிவில் பெறப்படும் இன்சுலின் மருந்துகள் நீரிழிவு நோயாளிகளின் வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். இன்னும் அதிக அளவிலான பரிசோதனைகள் இந்த கண்டுபிடிப்பில் தேவைப்படும்போதும் இந்த மாத்திரைகள் பயன்பாட்டிற்கு வரும் காலத்தை எதிர்நோக்குவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த நீரிழிவு நோய் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லிப்பி டோவ்லிங் தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...