Sunday, 22 December 2013

இந்தியப் பெண் டெக்ஸாஸ் மாநில தலைமை அதிகாரியாக நியமனம்

இந்தியப் பெண் டெக்ஸாஸ் மாநில தலைமை அதிகாரியாக நியமனம்

Source: Tamil CNN 
தென்அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாநிலத்தின் தலைமை செயலாளராக இந்திய வம்சாவளி பெண்மணியான நந்திதா பெர்ரி நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் இருந்து தனது 21-வது வயதில் வெறும் 200 டொலர்களுடன் அமெரிக்காவிற்கு சென்ற நந்திதா பெர்ரி, எப்படியாவது வக்கீல் ஆகிவிட வேண்டும் என்ற மன உறுதியுடன் சிரமப்பட்டு படித்து பட்டமும் பெற்றார்.அதன் பின்னர், வெற்றிகரமான வக்கீல்களில் ஒருவராக தனது நிலையை உயர்த்திக் கொண்ட அவர், டெக்ஸாஸ் மாநில அரசின் அட்டார்னியாகவும் பணியாற்றினார்.
அவரது கடும் உழைப்பு மற்றும் செயல்திறனில் திருப்தியடைந்த டெக்ஸாஸ் கவர்னர், மாநிலத்தை நிர்வகிக்கக் கூடிய மிக உயர்ந்த பெரும் பொறுப்பில் அவரை நியமித்து கவுரவித்துள்ளார்.மாநிலத்தின் அலுவல்கள் தொடர்புடைய முக்கிய ஆவணங்களை பாதுகாத்தல், மாநில அரசு இயற்றும் புதிய சட்ட திட்டங்களை அரசிதழில் (கெஸட்) பதிப்பித்தல், மாநில ஆட்சியின் தலைவராக கருதப்படும் கவர்னரின் சார்பில் முக்கிய ஆவணங்களில் கையொப்பமிடுதல், உள்ளிட்ட பல்வேறு பணிகளை நிர்வகிக்கும் பொறுப்பு, நந்திதா பெர்ரிக்கு வழங்கப்பட்டுள்ளது.இது தவிர, டெக்ஸாஸ் மாநிலத்தின் தேசிய, சர்வதேச பிரச்சினைகள் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பது, அம்மாநில தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவது மற்றும் அண்டை மாநிலமான மெக்சிக்கோவின் எல்லை பிரச்சினை தொடர்பாக கவர்னரின் சார்பில் செயல்படுவதும் இவரது கூடுதல் பணிகளாகும்.
இவரது கணவர் மைக்கேல் பெர்ரி, ஹுஸ்டன் வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றுகிறார். வரும் ஜனவரி மாதம் 7-ம் திகதி இந்த பதவியை நந்திதா பெர்ரி ஏற்றுக் கொள்கிறார்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...