Saturday, 21 December 2013

சிறுமியை மிரட்டி மாதக்கணக்கில் பலாத்காரம் செய்த பொலிஸார்

சிறுமியை மிரட்டி மாதக்கணக்கில் பலாத்காரம் செய்த பொலிஸார்

Source: Tamil CNN
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பாடசாலை மாணவி ஒருவரை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த பொலிஸார் ஐவரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 வயதான மாணவியே இவ்வாறு பாதிக்கப்பட்டவர். 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பிரச்சினை தொடர்பாக சண்டிகர் பொலிசில் புகார் அளித்த மாணவியை, பொலிஸ் நிலையம் அழைத்து சென்று அக்ஷய், சுனில், ஜத்தர் உட்பட 5 பேர் துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் பொய் வழக்கு போடுவோம் என்று மிரட்டி, தொடர்ந்து அவரை பலாத்காரம் செய்து வந்தனர். கொடுமையை தாங்க முடியாத மாணவி உள்ளூர் பாஜக தலைவரின் உதவியுடன் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து பலாத்காரத்தில் ஈடுபட்ட நான்கு பொலிஸார் அடையாளம் காணப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர். மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து சென்ற போது அவர்களை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள் பொலிஸாரை கண்டித்து மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவி தற்கொலைக்கு முயற்சிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக, மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய பொலிஸாரே மாணவியை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...